நான் மட்டும் தேர்வளராக இருந்தால் இவரை எப்பையோ அணியில் இருந்து வெளியேற்றிருப்பேன் ; இந்திய அணியின் முன்னாள் வீரர் உறுதி ; முழு விவரம் இதோ ;

இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் இவரை எப்பையோ அணியில் இருந்து வெளியேற்றிருப்பேன் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேகார் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் வருகின்றனர். சமீப காலமாக இந்திய டெஸ்ட் அணி பல சாதனைகளை படைத்து வருகிறது. ஆனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 1 – 2 என்ற கணக்கில் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேகார் அளித்த பேட்டியில் ;

நான் சொல்றேன், தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தான் அவருக்கு இறுதி போட்டி. ஆமாம்…! உண்மையாக தான் சொல்கிறேன், யாரும் என்னை தப்பாக நினைக்க வேண்டாம். ஒரு பேட்ஸ்மேன் ரன்களை அடிப்பது மட்டுமின்றி அவர் பீல்டிங் செய்கிறார் என்பதில் தான் இருக்கிறது.

இதனை நான் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அவருக்கு சற்று நம்பிக்கை இல்லாதது போல தான் தெரிகிறது. ஆமாம்… ரஹானே பேட்டிங் செய்கின்ற விதம், அவர் ஆட்டம் இழக்கும் விதம் அனைத்தும் கவனித்து பார்த்தால் புரியும். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் விராட்கோலி அணியில் விளையாடி வருகிறார். அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் குறைந்தது 70 ரன்களை ஆவது அடித்து வந்துள்ளார்.

அது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் எனக்கு நன்கு தெரிகிறது ரஹானே இனியும் விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவுதான். அவருடைய கிரிக்கெட் காலம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார் சஞ்சய். மேலும் அவரிடம் புஜரா பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த சஞ்சய் மஞ்சரேகார் ; புஜராவை பற்றி பேச வேண்டுமென்றால் அவர் 100 டெஸ்ட் போட்டியில் விளையாட இன்னும் சில போட்டிகளே உள்ளன. எனக்கு தெரிந்து ரஹானேவை விட புஜராவுக்கு இன்னும் இந்திய அணியில் சில நாட்கள் விளையாடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் சஞ்சய் மஞ்சரேகார்.