இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவருக்காக இந்திய அணி வெற்றிபெற வேண்டும் ; கவாஸ்கரின் வேண்டுகோள் நிறைவேறுமா ??

0

இந்திய அணியின் முன்னாள்.கேப்டனான கபில் தேவுக்காக இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும். காரணத்தை சொன்ன கவாஸ்கர்….!

இன்று மூன்றாவது நாளில் தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியை விட தென்னாபிரிக்கா அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 202 ரன்களை அடித்தனர். பின்னர் பேட்டிங் செய்த தென்னாபிரிக்கா அணி 229 ரன்களை அடித்து இந்திய கிரிக்கெட் அணியன் ரன்களை முன்னேறியது.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 266 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளனர். இப்பொழுது தென்னாபிரிக்கா அணி 2 விக்கெட் இழந்து 118 ரன்களை அடித்துள்ளது. இன்னும் 122 ரன்களை அடித்தால் தென்னாபிரிக்கா அணிக்கு வெற்றி தான். ஒருவேளை இந்திய அணியின் பவுலர்கள் விக்கெட்டை விரைவாக கைப்பற்றினால் இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இதற்கிடையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர், அவரது கருத்தை பகிர்ந்துள்ளார். போட்டியை பற்றி கூறுகையில் ; இந்திய அணி இதுவரை தென்னாபிரிக்காவில் தொடரை வென்றதே இல்லை, அதுமட்டுமின்றி குறைவான போட்டிகளில் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 2018ஆம் ஆண்டு இங்கு விளையாடிய போது ஒருநாள் போட்டிக்கான தொடரை தான் இந்திய அணி வென்றது. ஆனால் டெஸ்ட் போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது இந்திய.

அதனால் இது மிகவும் முக்கியமான போட்டியாகும். அதுமட்டுமின்றி இன்று அதாவது ஜனவரி 6ஆம் தேதி தான் 1983ஆம் ஆண்டு இந்திய அணியை வழிநடத்தி உலகக்கோப்பையை பெற்று கொடுத்துள்ளார் கபில் தேவ். அவருடைய பிறந்தநாள் இன்று. அதனால் இந்திய அணி வெற்றி பெற்றால் அது அவருடைய பிறந்தநாள் பரிசாக இருக்கும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

ஆனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது சிரமம் தான் . ஏனென்றால் இன்னும் 122 ரன்களை அடித்தால் போதும், அதுமட்டுமின்றி தென்னாபிரிக்கா அணியில் இன்னும் 8 விக்கெட்டை மீதமுள்ள நிலையில் அவர்களுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம். அதிலும் தென்னாபிரிக்கா அணியின் கேப்டனான டீன் எல்கர் அருமையான ஆட்டத்தை விளையாடி வருகிறார். ஆட்டம் இழக்காமல் 46 ரன்களை அடித்த நிலையில் விளையாடி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here