இது நடக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் நாங்க விளையாட மாட்டோம் ; இந்திய அணிக்கு நெருக்கடி

நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடந்து முடிந்து நிலையில் இப்பொழுது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

ஆனால் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது நியூஸிலாந்து. அதனால் இனிவரும் இரு போட்டிகளிலும் இந்திய அணி வென்றால் தான் தொடரை கைப்பற்ற முடியும்.

ஐசிசி போட்டிகளில் தொடர்ந்து சொதப்பும் இந்திய :

மற்ற அணிகளுக்கு எதிரான சீரியஸ் தொடரில் சிறப்பாக விளையாடும் இந்திய கிரிக்கெட் அணி, ஐசிசி உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மோசமான நிலையில் வெளியேறி வருகிறது இந்திய. சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாத நிலையில் மோசமான நிலையில் வெளியேறியுள்ளது இந்திய.

அதனால் இனிவரும் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் வீரர்களை சரியாக தேர்வு செய்ய வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனால் அடுத்த டி-20 உலகக்கோப்பை 2024 போட்டிக்கான முயற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகிறது இந்திய.

இந்திய மற்றும் பாகிஸ்தான் :

எப்பொழுதும் மற்ற அணிகளுக்கு எதிரான போட்டிகளை விட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிக்கு தான் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருப்பார்கள். இப்பொழுது அதற்கு சிரமம் ஏற்படும் போல தான் தெரிகிறது. அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை (ஒருநாள்) போட்டிகள் பாகிஸ்தான்னில் நடைபெற உள்ளது. அதனால் அங்கு இந்திய விளையாடுவது சிரமம் தான் என்றும், இரு அணிகளுக்கு பொதுவான மைதானத்தில் போட்டியை நடந்த வேண்டுமென்று இந்திய அணியின் உறுப்பினர் ஜெய் ஷா கூறிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணியின் உறுப்பினர் ரமீஸ் ராஜா கூறுகையில் :” ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி பாகிஸ்தான் நாட்டுக்கு வந்தால் மட்டுமே நாங்கள் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ள ஒருநாள் உலகக்கோப்பை (இந்தியா)-விற்கு வருவோம். இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் நாங்க ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டோம். பாகிஸ்தான் இல்லையென்றால் யார் உலகக்கோப்பையை பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.”

இந்த முடிவை இந்திய அரசாங்கம் தான் எடுக்க வேண்டும். என்ன செய்ய போகிறார்கள் ? இது விளையாட்டு என்ற அடிப்படையில் இரு அணிகளும் சாதாரணமாக விளையாடுவது சரியாக இருக்குமா ? அல்லது இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு செல்ல வேண்டாமா ? உங்கள் கருத்து என்ன ?