உங்க பயனுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை ; சச்சின் சொன்ன பதில் இதுதான் ;

ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இதுவரை வெற்றிகரமாக லீக் போட்டிகள் முடிந்த அந்நிலையில் இப்பொழுது ப்ளே – ஆப் சுற்றுகள் நடைபெற்று கொண்டு வருகிறது. வருகின்ற 29ஆம் தேதி அன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது.

அதனால் இந்த முறை யார் கோப்பையை வெல்ல போகிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிகளில் மிகவும் மோசமான நிலையில் விளையாடியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஐந்து முறை சாம்பியன் படத்தை வென்ற மும்பை அணிக்கா இந்த நிலைமை ?

ஆமாம், சரியாக முதல் 8 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து கொண்டு வந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. அதற்கு முக்கியமான காரணம் ஐபிஎல் 2022 ஏலத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்யாதது தான் காரணம் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணியை சச்சின் டெண்டுல்கர் வழிநடத்தி வந்தார். சென்னை அணிக்கு எப்படி தோனியோ..! அதேபோல தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின் டெண்டுல்கர். அந்த பாசம் இருப்பதால் எப்பொழுது ஏலத்தில் சச்சின் டெண்டுல்கர் மகனை அணியில் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

அதேபோல தான் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியால் கைப்பற்றப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி என்னதான் விளையாடினாலும் இந்த முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாது என்பது நன்கு தெரியும்.

அதனால் மீதமுள்ள போட்டிகளில் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்தனர். ஆனால் அப்பொழுது அர்ஜுன் டெண்டுல்கருக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இதனை பற்றி சச்சின் டெண்டுல்கரிடம் பல கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த சச்சின் :

“இது ஒரு வித்தியாசமான கேள்வியாக உள்ளது. நான் என்ன நினைக்கிறன், நான் என்ன ஆசைப்படுகிறேன் என்பது முக்கியம் இல்லை. இந்த சீசன் எப்பையோ முடிந்துவிட்டது. எப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை தேர்வு செய்யும்போது நான் அதில் பங்கேற்கவே மாட்டேன்.”

“அதனை மாட்டும் நான் எப்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுவேன். ஏனென்றால் இதுவரை நான் அப்படி தான் செய்து வருகிறேன். அதுமட்டுமின்றி, நான் எனது மகனிடம் , இனிவரும் காலங்கள் மிகவும் மோசமாக தான் இருக்கும், கடினமாக கூட இருக்கலாம்.”

உனக்கு கிரிக்கெட் பிடிக்கும், அதனால் விளையாட தொடங்கினாய், அதனை கடினமான உழைப்போடு தொடர்ந்து செய் அதற்கான பலன் நிச்சியமாக உனக்கு கிடைக்கும் என்று நான் (சச்சின்) மகனிடம் கூறினேன் என்று சச்சின் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்…!

மும்பை இந்தியன்ஸ் அணி எதனால் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்க தயங்கி வருகிறது ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!