இனிமேல் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டிகளே கிடையாது ; அதிர்ச்சியில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்கள் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற தொடங்கியுள்ளது. அதிலும் இப்பொழுது 8 அணிகளுக்கு இடையேயான தகுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் முதல் இரு இடத்தை கைப்பற்றும் அணிகள் தான் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெரும். அதில் தான் இந்திய, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற பெரிய பெரிய அணிகள் இடம்பெற்றுள்ளனர். மற்ற போட்டிகளை காட்டிலும் கிரிக்கெட் போட்டிகளுக்கும் ரசிகர்களின் வரவேற்பில் பஞ்சம் இருக்காது.

ஏனென்றால், அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்திய மக்களுக்கு மற்ற விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் போட்டிக்கு தான் அதிக வரவேற்பு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனால் இந்தியாவின் உள்ளூர் விளையாட்டான ஐபிஎல் டி-20 போட்டி புள்ளிபட்டியலில் மேல் இடத்தில் உள்ளனர்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் :

தோனி , கங்குலி போன்ற வீரர்கள் இந்திய அணியின் கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் சண்டைக்கு பஞ்சம் இருக்காது. எபப்டி எல்லையில் சண்டை போடுகிறார்களே, அதேபோல் மைதானத்தில் வாய் வார்த்தையால் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஆனால் சமீப காலமாக அப்படி எந்த சண்டையை நாம் பார்க்க முடிகிறது இல்லை. ஏனென்றால், அனைத்து வீரர்களும் சகஜமாக பழகி வருவது தான் அதற்கு முக்கியமான காரணம். ஆனால் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் எதாவது நடைபெற்று அதனை பல கோடி கிரிக்கெட் ரசிகர்கள் அந்த போட்டியை பார்ப்பார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆசிய கண்டத்தில் இருக்கும் நாடுகளுக்கு இடையே ஆசிய டி-20 போட்டி என்ற பெயரில் ஒரு சில அணிகளை வைத்து போட்டியை நடத்துவது வழக்கம் தான். சமீபத்தில் தான் ஆசிய கோப்பை 2022 டி-20 லீக் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இலங்கை அணி தான் கோப்பையை வென்றுள்ளனர்.

இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் இடம்பெற்று விளையாடி உள்ளனர். அடுத்த ஆண்டு ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற போவதாகவும் அதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் நாட்டுக்கு சென்று ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுவார்களா என்று கேள்வி எழுந்து.

அதற்கு பதிலளித்த பிசிசிஐ உறுப்பினர் ஜெய் ஷா கூறுகையில் ; “நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை போட்டிக்காக பாகிஸ்தான் நாட்டுக்கு செல்லாது என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான்-க்கு பதிலாக பொதுவான இடத்தில் தான் போட்டி நடைபெறும் என்று கூறியுள்ளார்.”

இதனை தொடர்ந்து ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை போட்டிக்காக பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றால் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற போகின்ற ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விலகி செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here