மற்ற வீரர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை ; ரன்களை அடித்து தொம்சம் செய்ய இவரே போதும் ; ராகுல் டிராவிட் ஓபன் டாக் ;

0

இன்று மதியம் 1:30 மணியளவில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், டீன் எல்கர் தலைமையிலான சவுத் ஆப்பிரிக்கா அணியும் மோத உள்ளனர். இந்த போட்டி, ஜோகன்னஸ்பர்க்-ல் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணியில் இடம்பெற போகும் வீரர்கள் : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணி இதுதான் ; அருமையான அணியாக இருக்கே…!!! வெற்றி நீடிக்குமா ??

இந்தியா அணியின் டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் குறிப்பாக மிடில் ஆர்டர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. முதல் டெஸ்ட் போட்டியில் ரஹானேவை தவிர்த்து மீதமுள்ள யாரும் ரன்களை அடிக்கவில்லை, பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் புஜாரா, விராட்கோலி, ரஹானே மற்றும் ரிஷாப் பண்ட் போன்ற பேட்ஸ்மேன் அதிகபட்சமாக 30 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளனர்.

நேற்று மாலை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் , இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் அவர்களது ஆட்டத்தை பற்றிய பேச்சு அதிகமாகவே எழுந்தது.

அதற்கு பதிலளித்த ராகுல் டிராவிட் ; இதனால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை.

ஒருவேளை சூழ்நிலையை புரிந்து கொண்டு பேட்டிங் செய்து நீண்ட நேரம் நின்றுவிட்டால் போதும், நிச்சியமாக எதாவது ஒருவர் அதிக ரன்களை அடித்து விடுவார். எப்படி கே.எல்.ராகுல் முதல் இன்னிங்ஸ்-ல் சதம் அடித்தாரோ, அதேபோல தான். புஜாராவின் மோசமான ஆட்டத்தை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ராகுல் டிராவிட் ;

ஆமாம் அவரால் நிச்சியமாக அதிக ரன்களை அடிக்க ,அப்படிப்பட்ட பேட்ஸ்மேன் தான் புஜாரா. அவர் சிறப்பாக விளையாடி ரன்களை அடிக்க தொடங்கினால் இந்திய அணிக்கு மிகவும் நன்றாக இருக்கும். அப்படி அவர் அதிக ரன்களை அடித்த போது பல முறை இந்திய அணி வென்றுள்ளது என்று புஜாராவிக்கு ஆதரவாக பேசியுள்ளார் ராகுல் டிராவிட்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதனால் 1 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னைலையில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றியை கைப்பற்றி தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா ? இந்திய அணி ??

உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பதிவு செய்யுங்கள்…!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here