இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணி இதுதான் ; அருமையான அணியாக இருக்கே…!!! வெற்றி நீடிக்குமா ??

நாளை மதியம் 1:30 மணியளவில் விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் , டீன் எல்கர் தலைமையிலான தென்னாபிரிக்கா அணியும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். இந்திய அணியில் மாற்றம் இருக்குமா இல்லையா ??

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ்-ல் 327 ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளனர். அதில் அதிகபட்சமாக ராகுல் 123 ரன்களையும், மயங்க் அகர்வால் 60 ரன்களையும் கைப்பற்றியுள்ளனர்.

பின்னர் முதல் இன்னின்ஸ் விளையாடிய தென்னாபிரிக்கா அணி 197 ரன்களை அடித்தனர். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய 174 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் இறுதியாக 191 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய கிரிக்கெட் அணி. நீண்ட நாட்கள் பிறகு தென்னாபிரிக்கா அணியை வென்று சாதனையை செய்துள்ளது இந்திய அணி.

இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. இப்பொழுது நாளை நடைபெற போகின்ற டெஸ்ட் போட்டிக்காக இரு அணிகளும் திவிரமான பயிற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில், இந்திய அணியில் யார் யார் இடம்பெற போகிறார்கள் ? அணியில் மாற்றம் இருக்குமா ? என்று பல கேள்விகள் நிலவி வருகிறது.

நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டி, ஜோகன்னஸ்பர்க் -ல் உள்ள வாண்டாரர் மைதானத்தில் நடைபெற உள்ளது . அதில் இதுவரை இந்திய அணி இரு போட்டிகளில் வெற்றியையும், முன்று முறை போட்டி ட்ராவில் முடிந்துள்ளது. நாளை நடைபெற போகின்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைக்குமா ??

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியை போலவே ஐந்து பவுலர்களுடன் தான் போட்டியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக வேகபந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் அணியில் இடம்பெறலாம். ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரு இன்னிங்ஸ்-களை சேர்த்து வெறும் 2 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.

அதனால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ; கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் , மிடில் ஆர்டர் ; புஜரா, விராட்கோலி, ரஹனீஸ் ரிஷாப் பண்ட், பவுலர்கள் ; உமேஷ் யாதவ், ஷர்டுல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்ப்ரிட் பும்ரா போன்ற வீரர்கள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது…!!