இதை பற்றி நிச்சியமாக ரோஹித் சர்மா சொல்லியே ஆக வேண்டும் ; என்ன நினைச்சிட்டு இருக்கீங்க ? ; கவாஸ்கர் ஆவேசம் ;

0

இந்திய கிரிக்கெட் : சமீபத்தில் தான் ஆசிய கோப்பை நடைபெற்று முடிந்துள்ளது. அதனை அடுத்து இப்பொழுது இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான மூன்று டி-20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் உள்ளது.

மீதமுள்ள இரு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றுமா இந்திய ?

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் :

நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி-20 லீக் போட்டிகளில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை என்றாலும், கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டிய, சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தது.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 208 ரன்களை அடித்தது இந்திய. அதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 55, சூரியகுமார் யாதவ் 46, ஹர்டிக் பாண்டிய 71 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா அணி.

இந்திய அணியின் பவுலிங் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 211 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி. என்னதான் 200க்கு மேற்பட்ட ரன்களை அடித்தாலும் இந்திய அணியின் போவுலிங் மோசமான நிலையில் இருப்பது தான் உண்மை.

டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இன்னும் ஒரு மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் பவுலிங் இவ்வளவு மோசமாக இருந்தால் எப்படி இந்திய அணி வெல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற்றுள்ள தீபக் சஹாருக்கு வாய்ப்பு கொடுப்பதை விட்டுவிட்டு உமேஷ் யதாவுக்கு ஏன் வாய்ப்பு கொடுத்தார்கள் என்று பலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் காவஸ்கர் அதிருப்தி :

இதனை பற்றி பேசிய கவாஸ்கர் ; ” நிச்சியமாக அடுத்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய அணி ஏன் உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள் என்பதை சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் காத்திருப்பு பட்டியலில் கூட இல்லை.”

“தீபக் சஹார் இப்பொழுது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அதனால் டி-20 உலகக்கோப்பை போன்ற முக்கியமான போட்டிகளில் விளையாடுவதற்கு முன்பு அவரை தயார் செய்ய வேண்டும். ஒருவேளை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரும் போட்டிகளில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் நிச்சியமாக தீபக் சஹார் அணியில் இடம்பெறுவார்.”

“அந்த நேரத்தில் நிச்சியமாக தீபக் சஹாருக்கு பவுலிங் சரியாக இருக்காது. அதனால் அடுத்த பேட்டியில் தீபக் சஹாருக்கு பதிலாக ஏன் ? உமேஷ் யாதவ் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் என்பதை சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.” கவாஸ்கர் சொல்வது போல உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறாத உமேஷ் யதாவிற்கு ஏன் ? வாய்ப்பு கொடுத்தார்கள்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் உமேஷ் யாதவ் 2 ஓவர் பவுலிங் செய்து 27 ரன்களை விட்டுக்கொடுத்தார். அதுமட்டுமின்றி 2 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here