சுரேஷ் ரெய்னாவை நாங்கள் தான் ஏலத்தில் அவரை எடுப்போம் ; சிஎஸ்கே இல்லை ; முழு விவரம் இதோ ;

0

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளது. அதனால் ஐபிஎல் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

அதுவும் இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் இந்த ஆண்டு 10 அணிகளுடன் விளையாட உள்ளனர். புதிய இரு அணிகள் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் ஆக இருப்பதால் மெகா ஏலம் நடைபெற உள்ளது.

அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை அணியில் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்றும் மற்ற வீரர்களை ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறியுள்ளது பிசிசிஐ..!. அதுமட்டுமின்றி, புதிய இரு அணிகளும் அதிகபட்சமாக 3 வீரர்களை மட்டுமே கைப்பற்ற முடியும் என்று பிசிசிஐ கூறியது.

ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றியை கைப்பற்றிய அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்ந்து வருகின்றனர். அதேநேரத்தில், ஐபிஎல் ஆரம்பித்த ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, 2020 குடும்ப பிரச்சனை காரணமாக அந்த ஆண்டு சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை. ஆனால் மீண்டும் 2021ஆம் ஆண்டு போட்டிகள் களமிறங்கினார். தொடக்கத்தில் ஆட்டத்தை விளையாடினார் சுரேஷ் ரெய்னா. ஆனால் இரண்டாம் பாகம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

அங்கு சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் சரியாக அமையவில்லை என்பது தான் உண்மை. பின்னர் சுரேஷ் ரெய்னா முதுகில் அடிபட்ட காரணத்தால் சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக ராபின் உத்தப்பா அணியில் இடம்பெற்றார். அதுமட்டுமின்றி, ராபின் உத்தப்பாவின் முக்கியமான பங்களிப்பு சிஎஸ்கே இறுதி போட்டியில் வெற்றி பெற முக்கியமான காரணமாக அமைந்தது.

அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது. அதில், ருதுராஜ் கெய்க்வாட், மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா மற்றும் மொயின் அலி போன்ற வீரர்கள் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சுரேஷ் ரெய்னா இதில் இல்லாதது பலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதனால் ஏலத்தில் சுரேஷ் ரெய்னா இடம்பெற்ற நிலையில் எந்த அணியில் அவரை கைப்பற்ற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சுரேஷ் ரைனாவுக்கு வயதாகிக்கொண்டு இருக்கின்றது. அதனால் கூடிய விரைவில் அவரை ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம்.

சமீபத்தில் பேட்டி கொடுத்த சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் உரிமையாளர் பேசியதில் ; சுரேஷ் ரெய்னாவின் அனுபவம், அவரது பீல்டிங், பேட்டிங் போன்ற அனைத்து விஷயங்களும் எங்கள் அணிக்கு தேவை படுகிறது. அதனால் அவரை அணியில் கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம் என்று கூறியுள்ளனர்.

சின்ன தல சுரேஷ் ரைனா எந்த அணியில் இடம்பெற போகிறார் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள Comments-ல் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here