வீடியோ ; இப்படி ஒரு கேட்ச் ஆ ? சின்ன பையன் போல இப்படி பண்ணிட்டு இருக்காரு தோனி ….!

0

இந்திய கிரிக்கெட் அணியில் மட்டுமின்றி உலக கிரிக்கெட் விளையாட்டில் மகேந்திர சிங் தோனியின் பெயர் என்றும் நிலைத்து கொண்டே தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆமாம்…! மகேந்திர சிங் தோனி கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட இடம்கிடைத்தது. பின்னர் சாதாரண வீரராக தொடங்கிய தோனி, 14ஆம் தேதி செப்டம்பர் 2007 அன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக உருவெடுத்தார்.

அதன்பின்னர் பல பிரச்சனைகள், பல விமர்சனங்கள் போன்ற அனைத்தையும் எதிர்கொண்டு வந்துள்ளார் தோனி. இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தான், அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு 2020ல் ஆகஸ்ட் மாதத்தில் நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுகிறேன் என்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தினார்.

ஆனால் இன்னும் தோனி ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார். கடந்த 2008ஆம் ஆண்டு தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் அறிமுகம் ஆனது. அப்பொழுது இருந்து இதுவரை சிஎஸ்கே அணியை தோனி தான் தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.

இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்பொழுது மகேந்திர சிங் தோனி நடித்த ஒரு விளம்பரம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில் ஒரு பந்து அதிக உயரத்தில் வருகிறது. அதேபோல ஒரு ரயில் வண்டியும் தோனிக்கு பின்னால் துரத்திக்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி இடையில் பல தடுப்புகள் உள்ளன. அதனை எல்லாம் உடைத்து கொண்டு தோனி முன்னேறி அந்த பந்தை பிடிப்பார்.

இதில் கூறுவது ; என்ன தான் வாழ்க்கையில் பல தடைகள் இருந்தாலும் அதனை எல்லாம் அடித்து உடைத்து முன்னேறிக்கொண்டு நினைத்த செயலை செய்து வாழ்க்கையில் வெல்ல வேண்டும் என்பது தான். அதனை வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here