இனிமேல் இவருக்கு அணியில் அதிக வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்படும் ; தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் ஓபன் டாக் ; முழு விவரம் இதோ ;

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

இதுவரை பல ஊர்களில் அதிரடியான ஆட்டத்தை விளையாடிய இந்திய பல கோப்பைகளை வென்றுள்ளது. ஆனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியை நிச்சியமாக யாரும் மறக்கவே மாட்டார்கள் என்பது தான் உண்மை. ஆமாம்… டெஸ்ட் போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது.

பின்னர் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தென்னாபிரிக்கா அணியை வெல்ல முடியவில்லை. 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணியை வாஷ்அவுட் செய்தது தென்னாபிரிக்கா அணி. முதல் இரு போட்டிகளில் எந்த மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது இந்திய. ஆனால் மூன்றாவது போட்டியில் நான்கு மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது.

அதில் தீபக் சஹரின் ஆட்டம் மிகவும் அருமையாக இருந்தது. ஆமாம்… முதல் 10 ஓவரில் பவுலிங் செய்த தீபக் முக்கியமான இரு விக்கெட்டை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் இருந்த போது அதிரடியாக ரன்களை அடித்து தொம்சம் செய்தார். ஆனால் இறுதியில் ஆட்டம் இழந்த காரணத்தால் அந்த போட்டியிலும் இந்திய அணியால் வெல்ல முடியாமல் போனது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் ; எனக்கு தெரிந்து தீபக் சஹார் அவருக்கு கொடுக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி வருகிறார். தென்னாபிரிக்கா அணியில் மட்டுமின்றி இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து அசத்தியுள்ளார். நான் அவரை (தீபக் சஹார்) இந்திய அணியின் “ஏ” பிரிவில் நீண்ட நாட்களாக கவனித்து வருகிறேன்.

இந்திய அணியில் தீபக் மற்றும் ஷர்டுல் போன்ற வீரர்கள் இருப்பது மிகவும் நன்று. இவர்களை போல வீரர்கள் இறுதியான நேரத்தில் அருமையாக விளையாட முடியும் என்றால் போட்டியை சிறப்பாக மாற்ற முடியும். அதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக தீபக் சஹாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. அதிவும் ஷர்டுல் தாகூருடன் விளையாடி இந்திய அணி வலுவாக இருக்கும் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here