மூன்று முக்கியமான பிரச்சனையில் இருந்து தப்பித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ; தோனி, ஸ்டீபன் பிளெம்மிங் மாஸ்டர் பிளான் இதுதான் ;

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். அதில் இருந்து இதுவரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.

ஐபிஎல் 16 சீசன் போட்டிக்கான ஏலம் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று நடைபெற்று முடிந்துள்ளது. அதில் அனைத்து அணிகளும் முடிந்தவரை போட்டி போட்டு கொண்டு சரியான வீரர்களை தேர்வு செய்துள்ளனர். ஆனால் சென்னை அணி பென் ஸ்டோக்ஸ் வீரரையும், பஞ்சாப் கிங்ஸ் அணி சாம் கரன் வீரரையும், மும்பை இந்தியன்ஸ் அணி கேமரூன் கிறீன் போன்ற முக்கியமான வீரர்களை கைப்பற்றியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :

ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் வென்ற அணியாக திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக முறை ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக திகழ்கிறது சென்னை. ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்தே கேப்டனாக விளையாடி வருகிறார் மகேந்திர சிங் தோனி. தோனி தலைமையிலான சென்னை அணி மொத்தம் நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலத்தில் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான மற்றும் ஆல் – ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ்-ஐ கைப்பற்றியதால் சென்னை அணி இப்பொழுது வலுவாக காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டியில் சென்னை அணியால் நிச்சியமாக கோப்பையை வெல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணிக்கு தேர்வான மூன்று முக்கியமான பிரச்சனைகள் :

பென் ஸ்டோக்ஸ் தேர்வு :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுது வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வதில் இருந்து தவறியதே இல்லை. எப்படியாவது சாம் கரணை கைப்பற்ற அனைத்து முயற்சிகளையும் சென்னை அணி மேற்கொண்டது. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. அப்பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணி சுமார் 18 கோடி விலை கொடுத்து சாம் கரணை கைப்பற்றினர். அதனால் பென் ஸ்டோக்ஸ்-ஐ எப்படியாவது கைப்பற்ற வேண்டுமென்ற முயற்சியில் இறங்கியது சென்னை.

அதேபோல 16.25 கோடி விலை கொடுத்து கைப்பற்றியது சென்னை. பென் ஸ்டோக்ஸ், ஒரு திறமையான வீரர். அதுமட்டுமின்றி, அழுத்தம் அதிகமாக இருக்கும் நேரத்தில் கூட சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட கூடிய வீரர். அதிரடியாக விளையாட கூடிய ஆல் – ரவுண்டரை எதிர்பார்த்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதேபோல பென் ஸ்டோக்ஸ்-ஐ தேர்வு செய்துள்ளனர்.

இளம் வீரர்களை உருவாகும் சென்னை அணி :

கடந்த பல ஆண்டுகளாகவே சென்னை அணி வயதான அணி என்று பலர் கிண்டல் செய்து வந்துள்ளனர். அதற்கு முக்கியமான காரணம் சென்னை அணியில் இருக்கும் வீரர்கள் பலருக்கு 30 வயதாவது குறைந்தது இருக்கும். ஆனால் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் முக்கியமான இளம் வீரர்களை தேர்வு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதுமட்டுமின்றி, அண்டர் 19 இந்திய அணியின் துணை கேப்டனான ஷைக் ரஷீத் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற முடியாமல் போனது. அதற்கு முக்கியமான காரணம் அவர் இளம் வீரர் மற்றும் அனுபவம் இல்லாத காரணத்தால் தான். ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலத்தில் ரஷீத்-ஐ கைப்பற்றியுள்ளது சென்னை. சென்னை அணியில் இது மிகப்பெரிய மாற்றம்.

ஜேமிசன் :

நியூஸிலாந்து வீரரான ஜேமிசன் ஐபிஎல் 2023 போட்டிக்கான ஏலத்தில் சென்னை அணியால் வெறும் 1 கோடி ரூபாய்-க்கு கைப்பற்றியுள்ளது சென்னை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவரவர் ஹாம் மைதானத்தில் விளையாட உள்ளதாக பிசிசிஐ கூறியுள்ள நிலையில், மற்ற மைதானத்தில் பிரிட்டோரியஸ் மற்றும் மதீஷா பத்திரான போன்ற வீரர்களால் சிறப்பாக பவுலிங் செய்ய முடியாது.

அந்த நேரத்தில் ஜேமிசன் பங்களிப்பு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடாத ஜேமிசன் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இணைந்து சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.