ரோஹித் , விராட்கோலி ஆகிய இருவருக்கு இவர் எவ்வளவோ மேல் ; இளம் வீரற்கு ஆதரவாக பேசியுள்ளார் ; பாகிஸ்தான் முன்னாள் வீரர் ;

0

ஐபிஎல் டி-20 போட்டிகள் இப்பொழுது தான் இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. இதுவரை மொத்தம் 70 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இனிவரும் போட்டிகள் நிச்சியமாக விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், இன்று இரவு முதல் ப்ளே – ஆஃப் சுற்றுகள் நடைபெற உள்ளது.

அதில் ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளன. இந்த போட்டி இன்று இரவு 7:30 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு மிகவும் வித்தியசமான ஆண்டாக மாறியுள்ளது தான் உண்மை. ஏனென்றால், ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை சாம்பியன் படத்தை வென்ற சென்னை , மும்பை மற்றும் கொல்கத்தா அணி லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியுள்ளது. அதேபோல இந்த ஆண்டு அறிமுகம் ஆன புதிய இரு அணிகளான லக்னோ மற்றும் குஜராத் போன்ற அணிகள் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதிலும் கடந்த ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாக மாறி வருகிறது தான் உண்மை. ஆமாம், ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு போட்டியில் ஆவது வெற்றி பெற வேண்டுமென்று மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது மும்பை.

14 போட்டிகளில் வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான தோல்விக்கு ஐபிஎல் 2022 ஏலம் தான் காரணம் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆமாம், இஷான் கிஷானை 15.25 கோடி விலை கொடுத்து கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை. 14 போட்டிகளில் விளையாடிய இஷான் கிஷான் 14 போட்டிகளில் 418 ரன்களை அடித்துள்ளார்.

அதில் அதிகபட்சமாக 81 ரன்களை அடித்துள்ளார். இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லதீப் கூறுகையில் ; “ஒரு ஐபிஎல் சீசன் வைத்து ஒரு வீரரை பற்றி கணிக்க முடியாது. அவர் ( இஷான் கிஷான் ) ஒரு ப்ளேயராக இருக்கும் வரை அவர் சிறப்பாக விளையாடுவார்.”

“ஒரு வீரரை அனைத்து அணிகளும் முயற்சி செய்த பிறகு தான் விலை 15.25 கோடி சென்றது. அதில் இருந்து தெரிகிறது அவரது மதிப்பு எந்த அளவிற்கு உள்ளது என்று. ஐபிஎல் போட்டிகளில் ரன்களை அடிப்பது வித்தியாசமான ஒரு விஷயம். ஏனென்றால், இந்த ஆண்டு ரோஹித் சர்மா, விராட்கோலி போன்ற இருவரும் தான் சரியாக ரன்களை அடிக்கவில்லை.”

“(இஷான் கிஷான்) அவர் நினைத்தது போல ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை. அதனால் தான் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகவும் மோசமான ஆண்டாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார் ரஷீத் லதீப்.”

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க இஷான் கிஷானுக்கு 15.25 கோடி விலை கொடுத்து கைப்பற்றியது சரியா ?? தவறா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

ஜூன் 9ஆம் தேதி முதல் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டஐந்து டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணியை சமீபத்தில் தான் பிசிசிஐ வெளியிட்டது. அதில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here