நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியை வென்றது. முதலில் டாஸ் வென்ற இந்தியா அணி பௌலிங் தேர்வு செய்தனர்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் வீரர்கள் 164 ரன்களை எடுத்த நிலையில் 20 ஓவர் முடிந்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா வீரர் கே.எல்.ராகுல் ஒரு ருங்கள் கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தார்.
இந்தியா அணி அவ்ளோதான் என்று நினைத்த போது தவனுக்கு பதிலாக களம் இறங்கிய இஷான் கிஷான் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். 26 பந்தில் 56 ரன்களை எடுத்து விக்கெட் இழந்தார் இஷான் கிஷான். அதன்பின்னர் பேட்டிங் செய்த விராட் கோலி தொடக்கத்தில் சற்று பொறுமையாக விளையாடினாலும் போக போக சுறுசுறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
17.5 ஓவர் முடிவில் இந்திய அணி இங்கிலாந்து அணியை வென்றது. அதனால் தல ஒரு போட்டிகல் வென்றுள்ளனர் இரு அணிகளும். அடுத்த டி-20 போட்டி நாளை அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. அடுத்த போட்டியில் அதேமாதிரி ஆன ஆட்டம் இருக்குமா? என்று பொறுத்துதான் பார்க்கவேண்டும்.
விராட் கோலியால் தான் நான் இதை செய்தேன் ; இஷான் கிஷான் ஓபன் டாக் .. ரசிகர்கள் மகிழ்ச்சி
போட்டிகள் அனைத்தும் முடிந்த பிறகு சஹால் மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் ஒரு நகைச்சுவையான பேட்டியை எடுத்தனர். அதில் சஹால் நீங்கள் என் அரை சதம் அடித்த போது பேட்டை ஏன் தூக்கி காமிக்கவில்லை? உங்களுக்கு கூச்சமா ?? என்ற கேள்விக்கு பதிலளித்த இஷான் கிஷான் :
நான் எனது ஆட்டத்தில் கவனமாக இருந்ததால் 50 ரன்கள் அடித்தது கூட தெரியவில்லை, அதுமட்டுமின்றி எனக்கு எப்போது அரைசதம் அடிக்கும்போது எந்தவிதமான அறிகுறியையும் நான் காமிக்கமாட்டேன். ஆனால் கோலி என்னிடம் பக்கத்தில் வந்து பேட்டை தூக்கி காமிக்க சொன்னார்.
அதனால் தான் நான் செஞ்சேன் என்று சஹாலுக்கு பதிலளித்துள்ளார். அதுமட்டுமின்றி இனி வரும் போட்டிகளில் எப்படி விளையாட போகிறார் என்று பொறுத்து தான் பார்க்க வேண்டும்? ஆனால் இஷான் கிஷான் ஒரு நல்ல பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.