இந்த முறை உலககோப்பை போட்டியில் விளையாட நான் தயாராக உள்ளேன் ; முன்னாள் சிஎஸ்கே வீரர் உறுதி ; இந்த முறை ஆவது வாய்ப்பு கிடைக்குமா ?

0

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டாக மாறியுள்ளது டி20 கிரிக்கெட் போட்டிகள்.

இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடக்கப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் தென்னாபிரிக்கா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரரான இம்ரான் தாகிர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ;

நான் இந்த முறையில் டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாட தயாராக தான் உள்ளேன். எனக்கு தெரியும் நான் இப்பொழுது பிட் ஆக இருக்குறேன். நான் உலகம் முழுவதும் விளையாடிய போட்டிகளை தென்னாபிரிக்கா அணியின் தேர்வாளர்கள் கவனித்து முடிவு செய்ய வேண்டும்.

நான் முதலில் பாகிஸ்தான் விளையாடி வந்தேன். ஆனால் நான் தென்னாபிரிக்கா அணிக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். என்னுடைய கனவுகளை நினைவாக்கி கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி நான் எப்பொழுதும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு என்னுடைய அனுபவத்தை பற்றி பகிர ஆசைப்படுகிறேன்.

நான் ஒரு சுழல் பந்து பயிற்சியாளராக கூட வருவேன். எனக்கு தெரிந்து நான் அணியில் தாமதமாக இணைந்தேன் என்று கூறியுள்ளார் இம்ராம் தாகிர். கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடி வந்தார் இம்ரான் தாகிர், ஆனால் ஐசிசி உலகக்கோப்பை 2021 போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் இம்ரான் தாகிர் இடம்பெறவில்லை. இப்பொழுது நடைபெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் விளையாடிய போட்டியில் அதிரடியான முறையில் பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார்.

இம்ரான் தாகிர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வந்தார். அதுவும் 2018 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஐபிஎல் 2020 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போது இம்ரான் தாகிர் அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெறவில்லை.

அதேபோல தொடர்ந்து கடந்த ஆண்டும் சிஎஸ்கே அணியில் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் இம்ரான் தாகிர் சிஎஸ்கே அணியில் இடம்பெறவில்லை. இந்த முறை எந்த ஐபிஎல் டி20 2022 போட்டிக்கான அணியில் இம்ரான் தாகிர் இடம்பெற போகிறார் என்பதை இன்னும் சில நாட்களில் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here