சிஎஸ்கே அணி இல்லைன்னா என்ன..! சுரேஷ் ரெய்னாவை நாங்கள் அணியில் எடுப்போம் ; ஐபிஎல் அணி அதிரடி முடிவு ;

ஐபிஎல் 2022;

ஐபிஎல் டி20 2022 போட்டிகள் வருகின்ற மார்ச் மாதத்தில் இருந்து நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆமாம்.. ! அதில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் போன்றக் இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ.

ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலம் வருகின்ற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியது. பின்னர் புதிய இரு அணிகளும் அதிகபட்சமாக 3 வீரர்களை தக்கவைத்து கொள்ள முடியும் என்றும் கூறியது.

அதில் ஒரு வெளிநாட்டு வீரர், இரு இந்திய வீரர் என்ற அடிப்படையில் மட்டும் தான் தக்கவைக்க முடியும். அதன் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ. மிதமுள்ள வீரர்கள் அனைவரும் ஏலத்தில் பங்கேற்க போகிறார்கள். அதனால் யார் யார் எந்த அணியில் இடம்பெற போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் டி20 லீக் போட்டிகளில் அதிக வெற்றிகளை மற்றும் அதிக முறை ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதில் ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மகேந்திர சிங் தோனி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளது சென்னை அணி.

அதில் சுரேஷ் ரெய்னா இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆமாம்..!! கடந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா பெரிய அளவில் விளையாட வில்லை. அதனால் ப்ளேயிங் 11 ல் வெளியேற்றினார்கள். பின்னர் அவருக்கு பதிலாக ராபின் உத்தப்ப இடம்பெற்ற காரணத்தால் சிறப்பான மிடில் ஆர்டர் சிஎஸ்கே அணிக்கு அமைந்தது.

அதனால் சுரேஷ் ரெய்னாவை மறந்துவிடனர். பின்னர் சிஎஸ்கே அணி இதற்கு மேல் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம் தான். ஏனென்றால் சுரேஷ் ரெய்னாவுக்கு வயதாகிவிட்டது. ஆனால் சமீபத்தில் சன்ரைஸ்சர்ஸ் ஹைதெராபாத் அணியின் நிர்வாகம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ;

சுரேஷ் ரெய்னாவின் அனுபவம் மிகவும் முக்கியமான ஒன்று. பேட்டிங் மற்றுமின்றி சிறந்த முறையில் பீல்டிங் செய்து வருகிறார் . அதனால் அவருடைய அனுபவம் எங்கள் அணிக்கு முக்கியமான ஒன்று. அதனால் நிச்சியமாக ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை கைப்பற்ற அனைத்து நடவடிக்கையும் நாங்கள் எடுப்போம் என்று கூறியுள்ளனர்.

இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் சுரேஷ் ரெய்னா ஏதாவது அணியில் இடம்பெருவாரா ?? இல்லையா ?? என்பதை இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும். கிரிக்கெட் ரசிகர்களே உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க…..!!!