ஐபிஎல் போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி ஆரம்பித்துள்ளது. இதுவரை 13 போட்டிகள் நடந்து முடிந்துவிட்டது. 13 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்ட பஞ்சாப் அணி தோல்வியைத் தழுவியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் டி காக் டக் அவுட் ஆகி விட்டார். அதன்பின்னர் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது தேவையில்லாமல் ரன் அவுட் ஆகிவிட்டார். இருந்தாலும் மனம் தளராமல் விளையாடிய ரோஹித் சர்மா 45 பந்தில் 70 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
அதன்பின்னர் களமிறங்கிய பொள்ளார்ட் மற்றும் ஹார்திக் பாண்டிய இருவரும் சேர்ந்து 77 ரன்களை எடுத்து மும்பை இண்டிங்ஸ் அணியை நல்ல ஒரு ரன்களை சேர்த்துள்ளனர். முதல் 1 to 17 ஓவரில் மும்பை இண்டிங்ஸ் அணி 129 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆனால் பொள்ளார்ட் மற்றும் ஹார்திக் பாண்டிய இருவரும் இணைந்து அணியை 191 ரன்னுக்கு கொண்டு சென்றனர்.
பொள்ளார்ட் மற்றும் ஹார்திக் பாண்டிய எங்கள் அணியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி. அவர்கள் அடித்த ரன்களால் தான் பஞ்சாப் அணியை வெல்லமுடிந்தது என்று புகழாரம் கூறியுள்ளார் மும்பை இண்டிங்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா.