இந்தியாவில் இதை நான் ரொம்ப மிஸ் பண்றேன்… !!! சிஎஸ்கே அணியின் வீரர் ; குட்டி குழந்தை…சாம் கரண் கருத்து..!!!

இந்தியாவில் இதை நான் ரொம்ப மிஸ் பண்றேன்… !!! சிஎஸ்கே அணியின் வீரர் ; குட்டி குழந்தை…சாம் கரண் கருத்து..!!!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 திருவிழா ஆரம்பித்து விட்டது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற சிஎஸ்கே போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷாப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்துள்ளனர். அதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 188 ரன்களை எடுத்துள்ளனர்.

அதில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கிய டுபலஸிஸ் மற்றும் ருதுராஜ் ஆகிய இருவரும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும் அதன்பின்னர் பேட்டிங் செய்த ரெய்னா, ஜடேஜா, சாம் கரண், அம்பதி ராயுடு, போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடினார்.

பின்பு பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் தவான் மற்றும் ப்ரித்வி ஷா இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர். 18.4 ஓவர் ஓவரில் 7 விக்கெட் வித்தியசத்தில் வென்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.

சிஎஸ்கே அணியின் முக்கியமான ஆல்-ரவுண்டர் ஆன சாம் கரண் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சிறப்பான முறையில் பேட்டிங் செய்துள்ளார். அதுமட்டுமின்றி பல விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். அதனால் சிஎஸ்கே அணியின் முக்கியமான வீரராக மாறி உள்ளார் சாம் கரண். டெல்லிக்கு எதிரான போட்டியில் 15பந்தில் 34 ரன்களை எடுத்துள்ளார்.

போட்டிக்கு முன்பு சாம் கரனிடம் உங்களுக்கு இந்தியாவில் என்ன பிடிக்கும் ?? என்ன மிஸ் பண்றிங்க ?? என்ற கேள்வி சாம் கரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சாம் கரண் ;; சில மாதங்கள், இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், டி-20 , ஒருநாள் போட்டிகள் இந்தியாவில் தான் நடைபெற்றது. அதனால் இந்தியாவில் விளையாடும் போது புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கிறது.

அதுமட்டுமின்றி இந்தியாவில் நான் கிரிக்கெட் விளையாடும் போது.. நான் மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டத்தை மிகவும் மிஸ் செய்கிறேன். அவர்கள் இருக்கும்போது அணியை உற்சாகம் செய்வார்கள். ஆனால் வைரஸ் காரணமாக இப்பொழுது அவர்கள் இல்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் சாம் கரண் ( குட்டி குழந்தை 🤗).