கடந்த போட்டியில் நான் செய்த தவறு தான் போட்டியில் தோல்வியடைய செய்தது ; தினேஷ் கார்த்திக் ஓபன் டாக் ;

இன்று இரவு 7 மணியளவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மூன்றாவது டி-20 போட்டியில் விளையாட உள்ளனர். இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருக்கின்றனர்.

அதனால் இன்றைய போட்டி நிச்சியமாக வாழ்வா ? சாவா ? என்ற நிலையில் தான் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, மீண்டும் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டிகளில் முடிந்த பிறகு இந்திய அணியின் அசைக்க முடியாத பினிஷராக வளம் வருகிறார் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக். அவரது அதிரடியான ஆட்டம் நிச்சியமாக இந்திய அணிக்கு இறுதி நேரத்தில் தேவையான விஷயமாக மாறியுள்ளது.

அதுமட்டுமன்றி இந்த ஆண்டு ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக். இப்பொழுது இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றதால் ரிஷாப் பண்ட் வாய்ப்பை இழந்து வருகிறார். இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் செய்த தவறை பற்றிப்பேசியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் கூறுகையில் ; ” ஒரு போட்டியில் 20 முதல் 25 பந்துகள் விளையாடினால் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமின்றி மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தால் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்தால் இன்னும் அதிக சந்தோசம் தான்.”

“ஒரு கீப்பராக இருக்கும்போது வரும் பந்தை எப்படி ஷாட் அடிக்க வேண்டுமென்று நன்கு தெரியும். ஆனால் அதே சமையத்தில் சரியான DRS எடுக்க வேண்டியதும் எங்கள் கையில் தான் இருக்கிறது. ஒரு போட்டியில் நான் அதனை சரியாக பார்க்காமல் விட்டுவிட்டேன். அதுமட்டுமின்றி போட்டி மிகவும் கடினமாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன்.”

“அதற்கு பலனாக அந்த போட்டியில் தோல்வியை பெற்றோம். அதனால் அந்த DRS போன்ற விஷயத்தில் கீப்பர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, நான் தான ரோஹித் ஷர்மாவிற்கு மூன்றாவது கண் என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”

இந்த ஆண்டு ஐசிசி 2022 டி-20 உலகக்கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு இந்திய அணிக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்க போகிறது ? சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்து காட்டுவாரா தினேஷ் கார்த்திக் ? உங்கள் கருத்துக்களை COMMENTS செய்யுங்கள்..!