வீடியோ : அப்பாடா இது ரன் அவுட் தான் ; பெருமூச்சு விட்ட தினேஷ் கார்த்திக் ; தீரில் சம்பவம் இதுதான் ;

0
Advertisement

ஹைதெராபாத் : இன்று இரவு 7 மணிக்கு தொடங்கிய மூன்றாவது போட்டியில் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதி விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் இருக்கின்றனர்.

அதனால் இன்றைய போட்டியில் வெல்லும் அணி தான் தொடரை கைப்பற்ற போகின்றனர். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இப்பொழுது ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகின்றனர்.

தொடக்க வீரரான க்ரீன் அதிரடியாக விளையாடியதால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஏனென்றால் 19 பந்தில் அரைசதம் அடித்துள்ளார் க்ரீன். பின்பு புவனேஸ்வர் குமார் பவுலிங் செய்து ஆஸ்திரேலியா வீரரான க்ரீன் விக்கெட்டை துல்லியமாக கைப்பற்றிவிட்டார். அதனால் இந்திய அணிக்கு ஒரு பெரிய தலை வலி நீங்கியது.

அவரை அடுத்து ஆஸ்திரேலியா வீரர்களான ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேக்ஸ்வெல் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்துள்ளனர். இதுவரை முடிந்துள்ளது 10 ஒவரில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 4 விக்கெட்டை இழந்த நிலையில் 86 ரன்களை அடித்துள்ளனர்.

இதற்கிடையில், தினேஷ் கார்த்திக் செய்த சம்பவம் இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. சரியாக 7.4ஓவரில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் வீசிய பந்தை மேக்ஸ்வெல் எதிர்கொண்டார். அப்பொழுது மேக்ஸ்வெல் இரண்டாவது ரன் ஓடி மீண்டும் பேட்டிங் செய்யும் இடத்திற்கு ஓடி வந்தார்.

அப்பொழுது அக்சர் பட்டேல் வீசிய பந்து நேராக ஸ்டம்ப் மேல் அடித்தது. ஆனால் அப்பொழுது தினேஷ் கார்த்திக் எதிர்பாராத விதமாக பந்து ஸ்டம்ப்பை அடிக்கும் முன்பு தினேஷ் கார்த்திக்கின் கை ஸ்டம்ப்பை அடித்தது. அதனால் விக்கெட் இல்லாமல் போய்விடும் என்று தான் தினேஷ் கார்த்திக் நினைத்து கொண்டு இருந்தார்.

ஆனால் அதிர்ஷ்டம் தினேஷ் கார்த்திக் பக்கத்தில் இருந்த காரணத்தால் அது ரன் அவுட் ஆனது. ஏனென்றால் தினேஷ் கார்த்திக்-ன் கை ஒரு Bails மேல் மட்டும் தான் பட்டது. மற்றொரு Bails மேல் பந்து பட்டது. அதுவும் மேக்ஸ்வெல் கிரீஸ்-குள் வருவதற்கு முன்பே. அதனால் விக்கெட் என்று கூறினர். ஒரு ஸ்டம்ப்-ல் இரு Bails இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here