நம்ம ரோகித் ஆ ? இது..! மோசமான பந்துவீச்சுக்கு ஆதரவாக பேசியுள்ளார் ரோஹித் சர்மா ; ஆச்சரியத்தில் இருக்கும் ரசிகர்கள் ; சொன்னது இதுதான் ;

நாக்பூர் : நேற்று இரவு 8:30 மணிக்கு மேல் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். இதுவரை நடந்த போட்டிகளில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர்.

போட்டியின் தாமதம் ஏற்படத்திற்கு காரணம் :

நேற்று இரவு 7 மணியளவில் டாஸ் போடும் நேரத்தில் பிட்ச்-ல் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. அதனால் சற்று காய்ந்த பிறகு போட்டியை தொடங்கலாம் என்று நடுவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதனை சரி செய்ய நீண்ட நேரம் ஆனதால் வேறு வழியில்லாமல் போட்டி 8:30 மணிக்கு மேல் தான் தொடங்கியது. அதுமட்டுமின்றி 20 ஓவர் போட்டியை வெறும் 8 ஓவர் போட்டியாக மாற்றியுள்ளனர்.

ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் :

முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் இருந்து 3 ஓவர் முழுவதும் விக்கெட்டை இழந்த நிலையிலும் ரன்களை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வந்தனர். அனால் பின்ச் மற்றும் மாத்தியூ வெட் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணிக்கு ரன்கள் குவிந்தது.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 8 ஓவர் முடிவில் 90 ரன்களை அடித்தனர். அதில் ஆரோன் பின்ச் 31, க்ரீன் 5, மாத்தியூ வெட் 43 ரன்களையும் அடித்தனர்.

இலக்கு மற்றும் இந்திய அணியின் பேட்டிங் :

பின்பு 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. தொடக்கத்தில் இரு ஓவர்கள் சிறப்பாக விளையாடி கொண்டு இருந்தது இந்திய. ஆனால் கே.எல்.ராகுல் ஆட்டம் இழந்ததால் இருந்து தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட்கோலியின் விக்கெட்டை இழந்தனர்.

ஆனால் ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தது. அதுமட்டுமின்றி ஹர்டிக் பாண்டிய மற்றும் தினேஷ் கார்த்திக் அடித்த ரன்களும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக மாறியுள்ளது. சமீபத்தில் அளித்த பெட்டியில் ரோஹித் சர்மா சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் ஹர்ஷல் பட்டேலின் மோசமான பவுலிங்-க்கு ஆதரவாக பேசியது ஆச்சரியமாக இருக்கிறது. ஆமாம், ரோஹித் சர்மா கூறுகையில் ; “கடந்த போட்டியில் ஹர்ஷல் பட்டேல் குறைவான ஃபுல் டாஸ் பவுலிங் செய்துள்ளார். சில மாதங்களுக்கு பிறகு அதுவும் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அதனால் முதல் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது சவாலாக தான் இருக்கும். அதனால் அவருடைய பவுலிங் பற்றி நான் அதிகம் பேசவிரும்பவில்லை என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

புவனேஸ்வர் குமாரை அடுத்து இந்திய அணியில் அதிக ரன்களை கொடுத்து வரும் வீரர்களில் ஒருவர் தான் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல். முதல் போட்டியில் 4 ஓவர் பவுலிங் செய்து 49 ரன்களையும், இரண்டாவது போட்டியில் 2 ஓவர் பவுலிங் செய்து 32 ரன்களையும் விட்டுக்கொடுத்துள்ளார் ஹர்ஷல்.

அதிக ரன்களை கொடுத்து வரும் ஹர்ஷல் பட்டேல் உலகக்கோப்பை டி-20 2022 போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் ஹர்ஷல் பட்டேலுக்கு பதிலாக இளம் வீரரான அர்ஷதீப் சிங் அணியில் இடம்பெற்றால் சிறப்பான பவுலிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பை போட்டிகளில் டெத் ஓவர்களில் சிறப்பான பந்து வீச்சை செய்துள்ளார் அர்ஷதீப் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் ஹர்ஷல் பட்டேல் இடம்பெற வேண்டுமா ? அல்லது அர்ஷதீப் சிங் இடம்பெற வேண்டுமா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!