கடந்த ஆண்டு இல்லாதது போல் , இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி இந்தியாவில் நடைபெற போகிறது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்கும் மைதானத்தில் அனுமதி அளிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் மூழ்கியுள்ளனர்.
ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளை விட டி-20 போட்டி என்றாலே மக்கள் இடையே மிகுந்த ஊட்டச்சத்தை தருகிறது என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எண்ணம். ஐபிஎல் என்றாலே இந்தியாவில் ஒரு திருவிழா போன்ற சந்தோசம் ஏற்படும்.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி வருகின்ற ஏப்ரல் – மே மாதத்தில் நடக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஐபிஎல் 2021 ஆண்டிற்கு ஆனா ஏலம் இந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று வருகிறது. அதற்குள் சென்னை அணி புதிதாக சில வீரர்களை எடுத்துள்ளனர்.
ஐபிஎல் 2021: சென்னை அணியின் நான் இருப்பது மிகவும் எனக்கு சந்தோசத்தை அளிக்கிறது..!! யார் அந்த வீரர்?
சிஎஸ்கே அணியில் புதிதாக பௌலிங் செய்ய இந்தியாவை சேர்ந்த வீரர் கிருஷ்ணப்ப கவுதம் சென்னை சூப்பர் கிங்ஸ் செய்யப்பட்டார். இதனால் ஒரு நல்ல பௌலிங் இருக்கும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் எதிர் பார்க்கப் படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த கிருஷ்ணப்ப கவுதம் ஒரு செய்தியை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது என்னுடைய கனவு என்றும் அது இப்பொழுது நினைவாகிவிட்டது என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தல தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா உடன் விளையாட போவது மிகவும் எனக்கு ஆர்வமாக இருப்பதாகவும் என்னால் முடிந்தவரை என்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடுவேன் என்று கிருஷ்ணப்ப கவுதம் கூறியுள்ளார். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி கிருஷ்ணப்ப கவுதம் இதற்கு முன்னாள் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் அணியில் சிறப்பான ஆல்ரவுண்டராக திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.