இந்திய அணிக்கும் விராட்கோலியின் கேப்டன் பதவிக்கான பேச்சுவார்த்தை இன்னும் ஓய்ந்த பாடு இல்லை.
ஆமாம்.. கடந்த ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிக்கு பிறகு ஆரம்பித்தது இந்த பிரச்சனை. அதில் அவரே விராட்கோலி நான் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தார். அதேபோல பதவியும் விலகினார் விராட்கோலி.
பின்னர் ஒருநாள் போட்டிக்கு ஒரு கேப்டன் மற்றும் டி20 போட்டிக்கு இன்னொரு கேப்டன் என்ற அடிப்படையில் இருக்க கூடாது. அதனால் விராட்கோலியை வெளியேற்றிவிட்டு அதற்கும் ரோஷித் சர்மாவை கேப்டனாக நியமனம் செய்தனர் என்று அணியின் தேர்வாளர்கள் மற்றும் பிசிசிஐ கூறியுள்ளது.
அதன்பின்னர் இப்பொழுது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் மூன்று டெஸ்ட் போட்டிகளும் நடந்து முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியது.
அதன்பின்னர் தான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட்கோலி. பின்னர் பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதேபோல இப்பொழுது பாகிஸ்தான் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் அளித்த பேட்டியில் ;
விராட்கோலி அவராகவே கேப்டன் பதைவியில் இருந்து விலகவில்லை, அவர் அந்த இடத்திற்கு தல்லப்பட்டுள்ளார். ஆனால் இது அதற்க்கான நேரமில்லை , ஏனென்றால் அவர் இன்னும் பல விஷயங்களை செய்ய வேண்டியுள்ளது. கடந்த 6 ,7 ஆண்டுகளாக இந்திய அணியை வழிநடத்தி வந்துள்ளார். ஆனால் நான் இதுவரை அவரது கேப்டன் பற்றி பேசியதே இல்லை.
அவர் எப்பொழுதும் பேட்டிங் செய்து 100, 120 ரன்களை அடிக்க வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம். அவருடைய இடத்தில் நான் இருந்தால் கல்யாணம் செய்திருக்க மாட்டேன். ஆமாம்… 10 முதல் 12 ஆண்டுகள் நிம்மதியாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். அதற்கு நான் கல்யாணம் செய்தது தவறு என்று சொல்லவே இல்லை, ஆனால் இந்திய அணிக்காக விளையாடபோவதால் இன்னும் சில ஆண்டுகள் கழித்து முடிவு செய்திருக்கலாம்.
கல்யாணம் முடிந்த பிறகு சில பொறுப்பு வந்திருக்கும் அதனால் மன அழுத்தம் அதிகரித்து கொண்டே தான் இருக்கும். கிரிக்கெட் வாழ்க்கை என்றால் 14 முதல் 15 ஆண்டுகள் தான் ,அதிலும் முக்கியமான தருணம் 6 ஆண்டுகள் தான். அதனை எப்பையோ விராட்கோலி கடந்துவிட்டார், அதனால் இப்பொழுது கஷ்டப்படுகிறார் என்று கூறியுள்ளார் அக்தர்.