பிராவோ அடுத்த போட்டியில் இல்லையா ?? அவருக்கு பதிலாக சூழல் பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு இருக்கு !!!யார் அவர் ??
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்கியுள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி மக்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் பல மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போய்விட்டது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே வீரர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதனால் நிச்சியமாக ஐபிஎல் 2021யில் காம்பேக் தரவேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த நேரத்தில். இந்த ஆண்டு முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்தது சிஎஸ்கே அணி.
ஐபிஎல் 2021 ; சிஎஸ்கே மோதிய முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொண்டது. அதில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. 188 ரன்கள் எடுத்தும் தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ். தோல்வியை குறித்து பேசிய தோனி..; எங்கள் அணியின் பவுளர்களிடம் செயல்படுத்தும் திறன் கமியாக உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும் போட்டியில் சில மாற்றங்கள் அணியில் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏனென்றால் தென்னாபிரிக்க வீரர் மற்றும் சூழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாகிர் கடந்த ஆண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாடவில்லை. அதேபோல இந்த ஆண்டும் முதல் போட்டியில் அவர் இடம் பெறவில்லை.
ப்ராவோவுக்கு பதிலாக இம்ரான் தாகிர் இடம் பெற அதிகம் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்ஸ்மேன் அதிகமாக இருக்கின்றனர். அதனால் ப்ராவோவுக்கு பதிலாக இம்ரான் தாகிர் இடம்பெற்றால் பவுலிங் வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.