இவர் அணியில் இல்லாத குறையை அவர் நிவர்த்தி செய்வார் !! ரசிகர்கள் உச்சகட்ட சந்தோசம்.. முழு விவரம் இதோ..!

இவர் அணியில் இல்லாத குறையை அவர் நிவர்த்தி செய்வார் !! ரசிகர்கள் உச்சகட்ட சந்தோசம்.. முழு விவரம் இதோ..!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி ஐபிஎல் 2021 சிறப்பான முறையில் ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

2008ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் ஆன ஐபிஎல் போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற்று ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் விறுவிறுப்பான நிகழ்வுக்கு பஞ்சம் இருக்காது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடி ஜோபர் ஆர்ச்சர் அவரது கையில் அடிபட்டதால், அவரால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட முடியவில்லை.

இரு தினங்களுக்கு முன்பு நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கான போட்டியில் ராஜஸ்தான் அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் அடிபட்ட காரணத்தால் ஐபிஎல் 2021 போட்டியில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது.

ஆனால் ஜோபர் ஆர்ச்சர் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைய வலைப்பயிற்சி செய்து வருகிறார் ஜோபர் ஆர்ச்சர்.

அதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்களுக்கு மற்றும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கை எழுந்துள்ளது. கூடிய விரைவில் ஐபிஎல் போட்டியில் ஜோபர் ஆர்ச்சரை எதிர்பார்க்கலாம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரசிகர்கள் கூடிய விரைவில் அணியில் இணைய வேண்டும் , நாங்கள் கடவுளை வேண்டுகிறோம் என்று சமூகவலைத்தளங்களில் அவரவர் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் 14 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட் எடுத்துள்ளார்.

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மொத உள்ளன. இதில் ஜோபர் ஆர்ச்சர் கலந்து கொள்வது மிகவும் கடினமான ஒன்று, அதனால் அடுத்த பொய்யில் விளையாடுவார் என்று எதிர்பார்க்க படுகிறது…!