இவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் சென்னை அணிக்கு நெருக்கடி ; சமாளிப்பாரா தோனி ;

நாளை நடைபெற உள்ள 17வது போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோத உள்ளனர். இதுவரை இந்த இரு அணிகளும் 26 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன.

அதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 11 போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, நாளைய போட்டி சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளதால் சென்னை அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

சென்னை அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் :

ஐபிஎல் தொடர் போட்டிகளில் அதிகமுறை ப்ளே- ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக திகழ்கிறது சென்னை அணி. இந்த தொடரில் சென்னை அணி மூன்று போட்டிகளில் இரு போட்டியில் வென்று ஐந்தாவது இடத்தில் உள்ளது சென்னை.இறுதியாக விளையாடிய மும்பை அணிக்கு எதிரான தொடரில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற வீரர்கள் இடம்பெறவில்லை.

அதுமட்டுமின்றி, போட்டி தொடங்கிய சில மணி நேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறினார் தீபக் சஹார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதுமட்டுமின்றி, பென் ஸ்டோக்ஸ்-க்கு சின்ன காயம் தான் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அதனை பெரிதுபடுத்த நாங்கள் யாரும் விரும்பவில்லை. அதனால் பென் ஸ்டோக்ஸ்-க்கு ஓய்வு கொடுத்துள்ளோம் என்று கூறினார் மகேந்திர சிங் தோனி. அதனால் தீபக் சஹாருக்கு பதிலாக ஹங்காரகேகர் -க்கு வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

அதுமட்டுமின்றி, மிச்செல் சாண்டனருக்கு பதிலாக மொயின் அலி (ஆல் – ரவுண்டர்) இடம்பெற அதிகவாய்ப்புகள் இருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டியில் வென்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது சென்னை. இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ?