ஐபிஎல் 2021ல் சிஎஸ்கே அணி செய்த விஷயத்தால் தான் ஆசிய கோப்பையை வென்றோம் ; தசுன் சானக்க பேட்டி ;

0

இறுதி தினங்களுக்கு முன்பு தான் ஆசிய கோப்பை டி-20 2022 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இலங்கை அணி வென்று கோப்பையை தட்டிச்சென்றுள்ளது.

இறுதி போட்டியின் விவரம் இதோ :

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டு வந்த நிலையில் ராஜபக்சவின் அதிரடியான ஆட்டத்தால் ரன்கள் குவிந்தது.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 170 ரன்கள் அடித்துள்ளனர். அதில் பதும் நிஸ்ஸங்க 8, தனஞ்சய டி சில்வா 28, ராஜபக்ச 71, ஹசரங்க 36, கருணாரட்னே 14 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பாகிஸ்தான் அணி.

ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. தொடக்க வீரரான ரிஸ்வான் அதிரடியாக விளையாடினாலும், மற்ற வீரர்கள் யாரும் பெரியளவில் விளையாடவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தது பாகிஸ்தான். 20 ஓவர் முடிவில் 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 147 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆசிய கோப்பை 2022 ஐ தட்டி சென்றது இலங்கை.

இதுவரை மொத்தம் 6 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளது இலங்கை. சமீபத்தில் வெற்றியை பற்றிய இலங்கை அணியின் கேப்டன் ஐபிஎல் போட்டியையும் சென்னை அணி செய்த விஷயத்தை பற்றி பேசியுள்ளார். இதனை பற்றி மேலும் பேசிய தசுன் சனாக்க கூறுகையில் ;

“உண்மையிலும் இங்கு ஆதரவுக்காக வந்திருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் நன்றி. அவர்கள் நினைத்தபடி இன்று சிறப்பாக விளையாடி பெருமை சேர்த்துள்ளோம். ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கு தான் இறுதி போட்டி விளையாடியது. அப்பொழுது சிஎஸ்கே முதல் பேட்டிங் செய்து தான் வெற்றிபெற்றுள்ளனர்.”

“அதனை மட்டும் தான் நாங்கள் யோசித்துக்கொண்டே இருந்தோம். அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு என்ன செய்ய வேண்டுமென்று நன்கு தெரியும். ஹசரங்க ஐந்து விக்கெட்டை இழந்த பிறகு தான் போட்டியில் பெரிய மாற்றம் ஆனது. 170 ரன்கள் அடித்தது சிறப்பான விஷயம் தான். அதுமட்டுமின்றி 160 ரன்களை சுலபமாக அடித்திருக்க முடியும்.”

“எங்கள் அணியில் (இலங்கை) இருக்கும் வீரர்கள் அனைவரும் சிறப்பாக அவரவர் தனி திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அதனால் தான் இந்த ஆண்டு சாம்பியன் படத்தை கைப்பற்றியுள்ளளோம். லீக் போட்டிகளில் சில தவறுகளை செய்துள்ளோம். ஆனால் இன்றைக்கு 100% சதவீதத்தை கொடுத்து தான் விளையாடினோம் என்று கூறியுள்ளார் தசுன் சனாக்க.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here