பட்டைய கிளப்ப போகும் டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணி இதுதான் ;

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி நவம்பர் வரை நடைபெற உள்ளது.

Indian Team

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை 2021 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அதில் இந்திய கிரிக்கெட் அணியை விராட்கோலி தான் வழிநடத்தினார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் விளையாடாத இந்திய கிரிக்கெட் அணி லீக் போட்டிகளில் இருந்தே வெளியேறியது இந்திய.

ஆனால் அதன்பின்பு அனைத்து விதமான தொடரிலும் சிறப்பாக விளையாடி கொண்டு வருகிறது இந்திய. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையிலும் இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டிக்கு செல்லாமல் வெளியேறியுள்ளது. என்னதான் தொடர் போட்டிகளில் மற்ற அணிகளை எதிர்த்து சிறப்பாக விளையாடினாலும் ஆசிய கோப்பை, டி-20 உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் இந்திய அணி தடுமாறிக்கொண்டே தான் வருகிறது.

indian Team 2

இருப்பினும் இந்த முறை டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே உலக கிரிக்கெட் அணி அவரவர் வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

அதேபோல தான் இன்று டி-20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா போட்டியில் பங்கேற்க போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அதில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த உள்ளனர்.

இந்திய வீரர்களின் விவரம் :

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், அர்ஷதீப் சிங்.

ஆசிய கோப்பையில் மோசமான நிலையில் இந்திய கிரிக்கெட் அணி வெளியேறியுள்ளது. அதனை தொடர்ந்து டி-20 உலகக்கோப்பை 2022ல் சிறப்பாக விளையாடுமா ? இந்த முறையாவது கோப்பையை வெல்லுமா ? இந்திய கிரிக்கெட் அணி…!