தினேஷ் கார்த்திக்-க்கு பதிலாக இவர் தான் சரியாக இருப்பார் ; இந்திய அணிக்கு தேவையான வீரர் ; முன்னாள் தேர்வாளர் உறுதி ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை 2022 போட்டிகள் இன்று இரவு 7:30 மணியளவில் இருந்து நடைபெற உள்ளது. இந்த முறை ஆசிய கோப்பை ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது. அதுமட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர்.

அதுமட்டுமின்றி, முதல் போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்று பல எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. இதனை பற்றி சிலர் ப்ளேயிங் 11ல் விளையாடும் வீரர்களை பற்றி அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரான சபா கரீம் சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார்.

அதில் தினேஷ் கார்த்தி-க்கு இடமில்லை. மேலும் இதனை பற்றி பேசிய சப கரீம் கூறுகையில் ; “என்னுடைய டாப் ஆர்டரில் ரோஹித் சர்மா , கே.எல்.ராகுல் மற்றும் விராட்கோலி போன்ற மூன்று வீரர்கள் தான் உள்ளனர். அதனால் இந்த முன்று வீரர்களின் அனுபவம் நிச்சியமாக பாகிஸ்தான் போன்ற அணிகளை எதிர்த்து விளையாட சரியாக இருக்கும்”.

“இதில் விராட்கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் பயிற்சி போட்டிகளில் நிச்சியமாக சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுப்பார்கள். அதுமட்டுமின்றி என்னுடைய ப்ளேயிங் 11ல் ஒரு விக்கெட் கீப்பருக்கு மட்டும் தான் வாய்ப்பு கொடுப்பேன். அப்படி செய்தால் தான் கே.எல்.ராகுல் மற்றும் விராட்கோலி ஆகிய இருவரையும் அணியில் வைத்திருக்க முடியும்.”

“டாப் ஆர்டர் முக்கியமான ஒன்று என்பதால் ரிஷாப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் போன்ற இருவரில் ஒருவரை தான் தேர்வு செய்ய முடியும். அதனால் நான் தினேஷ் கார்த்திகை விட ரிஷாப் பண்ட் -ஐ தான் தேர்வு செய்வேன். ஏனென்றால், இந்திய அணியின் X factor என்றால் அது ரிஷாப் பண்ட் தான். நிச்சியமாக ஆசிய கோப்பை 2022ல் சிறப்பாக விளையாடுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறியுள்ளார் சப கரீம் கூறியுள்ளார்.

தினேஷ் கார்த்திக் சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகளில் வெறும் ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக விளையாடிய நிலையில் மற்ற போட்டிகளில் மோசமான நிலையில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here