ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்ட குழப்பம் ; இந்திய அணியின் மிகப்பெரிய வீக்னஸ் இதுதான் ; என்ன செய்ய போகிறார் ரோஹித் ?

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாளை முதல் சுவாரஷியமான போட்டிகள் காத்திருக்கின்றனர். ஆமாம், கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பது கொண்டு இருந்த ஆசிய கோப்பை டி-20 போட்டிக்கான தொடர் நாளை இரவு 7:30 மணியளவில் இருந்து நடைபெற உள்ளது. முதல் போட்டியில் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளனர்.

இந்திய அணியின் முன்னேற்றம்:

கடந்த ஐசிசி உலகக்கோப்பை 2021 தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் போட்டிகளில் இருந்து வெளியேறியது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, அயர்லாந்து, தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளது இந்திய.

அதுமட்டுமின்றி, இப்பொழுது இருக்கும் இந்திய வீரர்கள் சிறப்பாகவும் அதிரடியாகவும் ரன்களை குவித்து வருகின்றனர். அதனால் நிச்சியமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் இந்திய அணியில் பல குழப்பங்கள் உள்ளது.

யார் தொடக்க வீரர் என்று. ஆமாம், கடந்த 12 டி-20 சர்வதேச போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷாப் பண்ட், சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான் போன்ற வீரர்கள் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வந்துள்ளனர்.

அதனால் யார் இப்பொழுது தொடக்க வீரராக ரோஹித் ஷர்மாவுடன் களமிறங்க போகிறார் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த முறை ஆசிய கோப்பை டி-20 போட்டிக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் இடம்பெற்றுள்ளார். ஆனால் கடந்த மூன்று மாதங்கள் போட்டிகளில் விளையாட கே.எல்.ராகுல் சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாபே தொடரில் விளையாடினார்.

ஆனால் அதிலும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை என்பது தான் உண்மை. மொத்தம் 1 , 30 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். அதனால் நிச்சியமாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுலை தொடக்க வீரராக விளையாடவைப்பது சிரமம் தான்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 தொடர் போட்டிகளில் தொடக்க வீரராக சூரியகுமார் யாதவ் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். அதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இதே பார்ட்னெர்ஷிப்பை எதிர்பார்க்கலாம். ரோஹித் ஷர்மாவுடன் தொடக்க வீரராக யார் களமிறங்க வேண்டும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!