கவலையே இல்லை அடுத்த போட்டியில் இவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறக்க போகிறோம் ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

ஒரு வழியாக இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில், இதுவரை இரு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றதால் தொடரை கைப்பற்றியுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

அதுவும் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 237 ரன்களை அடித்தது.

பின்னர் 238 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் இறுதி வரை போராடி 46 ஓவர் முடிவில் 193 ரன்களை மட்டுமே அடித்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

இதற்கிடையில் இந்திய அணியில் முதல் ஒருநாள் போட்டி தொடங்கும் முன்பு ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் யார் களமிறங்க போகிறார்கள் என்ற கேள்வியும் அதிகமாகவே எழுந்தது.

அப்பொழுது பேட்டி அளித்த இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா இந்த முறை இஷான் கிஷான் ஓப்பனிங் செய்ய போகிறார் என்று கூறினார். பின்னர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் அணியில் இடம்பெற போவதால் வேறு வழியில்லாமல் இஷான் கிஷனை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவானது.

அதனால் ரோஹித் சர்மா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கினார்கள். அதில் இந்திய அணிக்கு எந்த பயனும் இல்லை என்பது தான் உண்மை. ரோஹித் சர்மா 5 மற்றும் ரிஷாப் பண்ட் 18 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ; போட்டியில் வெற்றி பெறுவது மகிழ்ச்சியான செய்திதான். அதிலும் குறிப்பாக சூர்யாகுமார் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு ரன்களை எடுத்து கொடுத்துள்ளனர்.

இந்திய அணி முதல் மூன்று விக்கெட்டை இழந்ததை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப இருவரும் விளையாடியது சந்தோசமாக உள்ளது. புதிதாக ஏதாவது முயற்சி செய்யலாம் என்று தான் ரிஷாப் பண்ட் ஐ-தொடக்க வீரராக களமிறங்க வைத்தோம். ஆனால் அடுத்த போட்டியில் ஷிகர் தவான் களமிறங்க போகிறார்.

சில புதிய முயற்சிகளை செய்யும்போது போட்டிகளில் தோல்வியை கூட பெறலாம். ஆனால் எங்களுடைய ஒரே எண்ணம் இந்திய கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது தான். அதுவும் இன்றைய போட்டியில் பவுலர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடியுள்ளனர் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.