இவர் டி-20 போட்டியில் கில்லி ; ஆனால் ஒருநாள் போட்டியில் Worst ஆ ? இவரா இப்படி விளையாடுறது ;

0

இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் இன்று முதல் நடைபெற தொடங்கியுள்ளது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியும் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணியின் வலிமை :

சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் மிகவும் வலிமையாக காணப்படுகிறது. அதற்கு முக்கியமான காரணம் இந்திய அணியில் இருக்கும் வலுவான மிடில் ஆர்டர் பேட்டிங் தான். ஆமாம், சமீப காலமாக விராட்கோலியின் பங்களிப்பு என்பது மிகவும் கவலையான நிலையில் இருந்தது. ஆனால் ஆசிய கோப்பை 2022க்கு பிறகு அவரது போரம் மீண்டும் திரும்பியது.

அதுமட்டுமின்றி, பவுலிங் லைனில் அர்ஷதீப் சிங், உம்ரன் மாலிக் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பும்ரா, புவனேஸ்வர் குமார், ஷமி இல்லாவிட்டாலும் இந்திய அணியால் சமாளிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

டி-20 போட்டியில் பட்டைய கிளப்பும் சூர்யகுமார் யாதவ் :

கடந்த ஆண்டு மார்ச் 2021ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கி விளையாடினார் சூர்யகுமார் யாதவ்.அதில் இருந்து இதுவரை விளையாடிய அனைத்து டி-20 போட்டிக்கான போட்டியிலும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 111* ரன்களை விளாசியுள்ளார். சூரியகுமார் யாதவ் இறுதியாக விளையாடிய ஐந்து டி-20 போட்டியில் ; 30, 60, 14, 111, 13 ரன்களை அடித்துள்ளார். டி-20 போட்டியில் பட்டைய கிளப்பும் சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

இன்று நடைபெற்று வரும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ் அனைவரும் எதிர்பார்த்த படி 4 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளார். இதுவரை சூர்யகுமார் யாதவ் இறுதியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் 16, 13, 9, 8, 4 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். டி-20 போட்டியில் விளையாடும் அளவிற்கு சூரியகுமார் யாதவால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியவில்லை.

இதுவரை மொத்தம் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 340 ரன்களை அடித்துள்ளார். அதில் வெறும் இரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 13 போட்டிகளில் அதிகபட்சமாக 64 ரன்களை அடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here