இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடர் இன்று காலை முதல் தொடங்கியது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் மோதியுள்ளன.


டி-20 போட்டிக்கான தொடர் விவரம்:
சமீபத்தில் தான் டி-20 ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது இந்திய. இதில் விராட்கோலி, பும்ரா, ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய விளையாடி வந்தார்.
அதில் முதல் போட்டி மழை காரணமாக நடைபெறவில்லை. ஆனால் இரண்டாவது டி-20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய. பின்பு மூன்றாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 160 ரன்களை அடித்தனர். பின்பு 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. ஆனால் 75 ரன்கள் அடித்த நிலையில் தீடிரென்று மழை பெய்யத் தொடங்கியது. அதனால் வேறு வழியின்றி DLS முறையில் போட்டி முடிவின்றி போய்விட்டது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய அணி தொடரை வென்றுள்ளனர்.


ஒருநாள் போட்டிக்கான தொடர் :
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஒருநாள் போட்டிக்கான தொடரில் விளையாடி வருகின்றனர். இந்திய அணியில் ஷிகர்தவான், ரிஷாப் பந்த், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்டுல் தாகூர், ஷாபாஸ் அகமத், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், அர்சத்தீப் சிங், தீபக் சஹார், குல்தீப் சென் மற்றும் உம்ரன் மாலிக் இடம்பெற்றுள்ளனர்.
ரசிகர்கள் வரவேற்பு :
இந்தியாவில் மற்ற போட்டிகளை காட்டிலும் கிரிக்கெட் போட்டிக்கு தான் எப்பொழுதும் இந்திய மக்களிடையே வரவேற்பு இருக்கிறது. அதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களை [பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் நிச்சியமாக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இருக்கும். அதேபோல தான் இந்திய கிரிக்கெட் அணியின் (Super Fan) Divyaansh (மாற்றுத்திறனாளி) நேற்று இந்திய வீரர்கள் பயிற்சி செய்து கொண்டு இருந்த நேரத்தில் ஆக்க்லாண்ட் மைதானத்திற்கு சென்றார்.
அதனை பார்த்த கிரிக்கெட் வீரர்கள் அவரை பார்த்தவுடன் divyaansh அருகே சென்று அவரிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு புகைப்படும் எடுத்துக்கொண்ட வீடியோ இப்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
A moment to savour for #TeamIndia‘s super fan, Divyaansh after some memorable interactions in Auckland ahead of the #NZvIND ODI series 👏👏 pic.twitter.com/QopVaQCKDT
— BCCI (@BCCI) November 24, 2022
டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வென்றது போல், ஒருநாள் போட்டிக்கான தொடரிலும் இந்திய அணி வெல்லுமா ? இல்லையா ?