விளையாடாத இவருக்கு வாய்ப்பு குடுப்பிங்க ; ஆனால் சஞ்சு சாம்சன்-உடைய வாய்ப்பு நிராகரிக்கப்படுகிறது ; ரசிகர்கள் ஆவேசம் ;

0

தொடர் போட்டிகள் :

கடந்த 18ஆம் தேதி அன்று தொடங்கியது நியூஸிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த மூன்று டி-20 போட்டிக்கான தொடரில் இந்திய அணி வென்ற நிலையில் இப்பொழுது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

உலகக்கோப்பை / ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் இந்திய அணியின் நிலைமை :

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியால் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் சரியாக விளையாட முடியாமல் தொடர்ந்து தோல்வியை மட்டுமே பெற்று வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. அதுவும் இந்த ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் மோசமான நிலையில் தோல்வியை பெற்றது இந்திய.

அதனால் இதுவரை பார்த்திராத அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணிக்கு விமர்சனம் எழுந்தது. அதனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டியிலும், 2024ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பி போட்டியில் வெற்றி பெற இந்திய கிரிக்கெட் அணி சரியான வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் சஞ்சு சாம்சன் ; வாய்ப்பு கிடைத்தும்அதனை சரியாக பயன்படுத்தாமல் இருக்கும் வீரர் :

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக இருந்த சஞ்சு சாம்சன்-க்கு இப்பொழுது சரியாக வாய்ப்பு கிடைப்பது இல்லை. டி-20 போட்டிக்கான இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய அளவில் ரன்களை அடிப்பது இல்லை. ஆனால் வாய்ப்பு தொடர்ச்சியாக கிடைத்து வருகிறது. அதேபோல தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷாப் பண்ட் சமீப காலமாகவே சரியாக விளையாடுவது இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 6, 11 ரன்களை மட்டுமே அடித்திருந்தார், அதுவும் தொடக்க வீரராக களமிறங்கி.

இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியிலும் 15 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்துள்ளார் ரிஷாப் பண்ட். ஆனால் சஞ்சு சாம்சன் இறுதியாக விளையாடிய 5 சர்வதேச டி-20 போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்களை கைப்பற்றியுள்ளார். அப்படி இருக்கும் அவருக்கு ஏன் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்று ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here