இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.


இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறது ஆஸ்திரேலியா.
தொடக்க வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் மிச்சேல் மார்ஷ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வந்தனர். ஆனால் தொடர்ந்து விக்கெட்டை பறிகொடுத்த நிலையில் பார்ட்னெர்ஷிப் அமையாமல் தவித்து வருகிறது ஆஸ்திரேலியா.


இதுவரை 28 ஓவர் முடிந்த நிலையில் 4 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா அணி 138 ரன்களை அடித்துள்ளனர். அதில் டிராவிஸ் ஹெட் 33, மிச்சேல் மார்ஷ் 47, டேவிட் வார்னர் 23, மரன்ஸ் லபுஸ்சங்கமே 28 ரன்களை அடித்துள்ளனர்.
இதற்கிடையில் சுலபமாக பிடிக்க வேண்டிய கேட்ச்-ஐ சுப்மன் கில் தவறவிட்டது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மற்றுமின்றி ரோஹித் சர்மா மற்றும் ஹர்டிக் பாண்டியவை கோபமடைய வைத்துள்ளது.


10.2 ஓவரில் ஹர்டிக் பாண்டிய வீசிய பந்தை எதிர்கொண்டார் ஆஸ்திரேலியா வீரரான டிராவிஸ் ஹெட். அப்பொழுது டிராவிஸ் ஹெட் அடித்த பந்து சுப்மன் கில் இருக்கும் இடத்திற்கு சென்றது. அதனை பிடிக்காமல் தவறவிட்டது மட்டுமின்றி பவுண்டரியும் போனது.
அதனால் ஹர்டிக் பாண்டிய மற்றும் ரோஹித் சர்மா கோபத்தை வெளிப்படுத்தினர். ஏனென்றால், தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு அழுத்தத்தை கொடுத்து கொண்டு வந்தார்.
— Main Dheet Hoon (@MainDheetHoon69) March 22, 2023
இந்திய அணியின் ப்ளேயிங் 11 :
ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமத் ஷமி, முகமத் சிராஜ் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மூன்றாவது போட்டியில் வென்று ஒருநாள் போட்டிக்கான தொடரை வெல்லுமா இந்திய கிரிக்கெட் அணி ???