இன்று மதியம் 2 மணியளவில் தொடங்கியது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்கத்தில் சற்று சோர்வான ஆட்டத்தை விளையாடினாலும், மூன்றாவதாக களமிறங்கிய தென்னாபிரிக்கா அணியின் கேப்டன் தெம்பா பவுமா மற்றும் வான் டெர் டூஸ்ஸன் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளனர். அதில் பவுமா 110 மற்றும் டூஸ்ஸன் 129 ரன்களை அடித்துள்ளனர்.
பின்னர் நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 294 ரன்களை அடித்தனர். அதில் டி-காக் 27, மலன் 6, பவுமா 110, மர்க்கரம் 4, டூஸ்ஸன் 129 மற்றும் மில்லர் 2 ரன்களை அடித்துள்ளனர். இந்திய அணி 295 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது. இதுவரை 25 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் 140 ரன்களை அடித்துள்ளது இந்திய. வெற்றியை கைப்பற்றுமா இல்லையா °??
ரோஹித் சர்மாவை போலவே தான் கே.எல்.ராகுல் தவறு செய்து விட்டாரா ?? ஆமாம் சமீபத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிக்கான அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெற்றார். ஆனால் அப்பொழுதும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பே கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது தான் விஜய் ஹசாரே கோப்பையில் அதிக முறை சதம் அடித்துள்ளார் ருதுராஜ்.
அதுவும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கி அடித்து தொம்சம் செய்துள்ளார். அப்படி இருந்தும் இன்றைய முதல் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அணியிலேயே இடம்பெறவில்லை. ஆமாம்.. ஆனால் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளனர். வருங்கால இந்திய அணியின் முன்னணி வீரராக ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெருவார் என்று பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விராட்கோலி வெறும் ப்ளேயர் ஆக களமிறங்கியுள்ளார். அதனால் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி வெற்றியை கைப்பற்றுமா ? தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான ஒருநாள் போட்டியில் தொடரை கைப்பற்றுமா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் Comments பண்ணுங்க…!!!