இவர் இப்படி பேட்டிங் செய்வார் என்று சத்தியமாக நாங்க எதிர்பார்க்கவே இல்லை ; சஞ்சு சாம்சன் பேட்டி ;

0

நேற்று நடந்த 24வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இந்த போட்டி மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர்… குஜராத் வீரர்கள்.

பின்பு ஹார்டிக் பாண்டிய மற்றும் அபிநவ் மனோகர் போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 192 ரன்களை அடித்தனர். அதில் சுமன் கில் 13, விஜய் ஷங்கர் 2, ஹார்டிக் பாண்டிய 87, மனோகர் 43 மற்றும் மில்லர் 31 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஆனால் தோல்வி தான் காத்திருந்தது. தொடக்க வீரரான பட்லரை தவிர்த்து அனைத்து வீரர்களும் சில ரன்கள் அடித்த நிலையில் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர்.

இறுதி வரை போராடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட்டை இழந்த நிலையில் 155 ரன்களை அடித்தனர். அதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வென்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 54, சஞ்சு சாம்சன் 11, ஹெட்மயேர் 29, ரியல் பராக் 18, சம்ஸ் நீஷம் 17 ரன்களை அடித்துள்ளனர்.

போட்டி முடிந்த பிறகு பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில் ; “இந்த போட்டியில் குஜராத் அணி வென்றதிற்கு முக்கியமான காரணம் அவர்கள் பேட்ஸ்மேன் தான். அதனால் அந்த பெருமை அவர்களுக்கு தான் சேரும். அதுமட்டுமின்றி, ஹர்டிக் பாண்டிய சிறப்பாக விளையாடிய ரன்களை குவித்தார்.”

“ஒருவேளை எங்களுக்கு விக்கெட் போகாமல் இருந்திருந்தால் நிச்சியமாக போட்டியில் வெற்றிபெற்றிருக்க முடியும். என்னதான் நாங்கள் (ராஜஸ்தான்) பவர் ப்ளே-வில் அதிக ரன்களை அடித்திருந்தாலும், விக்கெட்டை இழந்துவிட்டோம். குறிப்பாக ஹார்டிக் பாண்டிய இன்றைய போட்டியில் பேட்டிங் மட்டுமின்றி, பவுலிங், பீல்டிங் போன்ற அனைத்து விஷயத்திலும் கலக்கிவிட்டார்.”

“நான் பல லீக் போட்டிகளில் விளையாடு வருகிறேன். அதில் தான் எனக்கு புரிந்தது ஒவ்வொரு போட்டியிலும் கடினம் இருக்கத்தான் செய்யும் என்று. எல்லாத்தையும் விட தோல்வியில் நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்பது தான் மிகவும் முக்கியமான ஒன்று. இதுவரை நான் 3வதாக தான் பேட்டிங் செய்து வந்துள்ளேன்.”

“ஆனால் இனிவரும் போட்டிகளில் எப்பொழுது என்னை அணிக்கு தேவை படுகிறதோ, அப்பொழுது நான் பேட்டிங் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் சஞ்சு சாம்சன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here