இந்த தவறை செய்தால் எந்த போட்டியிலும் இந்திய அணியால் வெல்லவே முடியாது ; ஷேன் வாட்சன் ஓபன் டாக் ;

0

இந்த மாதிரியான தவறைகளை செய்தால் எப்படி செமி – பைனல் போட்டியில் வெல்ல முடியும் ?

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை இன்று மதியத்துடன் நிறைவடைய உள்ளது. இறுதி போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர். இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணி செமி-பைனல் போட்டியில் மோசமான நிலையில் தோல்வியடைந்து வெளியேறியது இந்திய.

வலுவாக இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு உலகக்கோப்பையை வெல்லும் என்று தான் பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், இங்கிலாந்து அணியை வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெரும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு இருந்தனர். ஆனால் தோல்வி பெற்ற காரணத்தால் இதுவரை பார்த்திராத அளவிற்கு இந்திய அணி மேல் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர்.

அரையிறுதி சுற்றில் இருந்து வெளியேறிய இந்தியா அணியின் தோல்விக்கு ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் பார்ட்னர்ன்ஷிப் மற்றும் இந்திய அணியின் பவுலிங் தான் காரணம் என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால், இந்திய அணியின் தோல்விக்கு இது மட்டுமே காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன்.

அதில் “இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சுழல் பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹாலுக்கு ஏன் ? வாய்ப்பு கொடுக்கப்படவில்லை..! இது மிகப்பெரிய தவறாக தான் எனக்கு தோன்றுகிறது. இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி சுற்றில் லிவிங்ஸ்டன் சிறப்பாக சுழல் பந்தை வீசி ரன்களை முடிந்தவரை கட்டுப்படுத்தியுள்ளார். அதனால் சஹால் இடம்பெற்றிருந்தால் நிச்சியமாக இந்திய அணிக்கு பலமாக இருந்திருக்கும்.”

“மேலும் இந்திய அணியின் தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா போன்ற வீரர்களின் பங்களிப்பு மிகவும் குறைவு தான். விக்கெட்டை இழந்துவிட கூடாது என்று பொறுமையாக பவர் ப்ளே முழுவதும் நிதானமாக விளையாடினார்கள். ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் கடினமான பந்து வீச்சை எதிர்கொண்டு சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியின் பேட்டிங், இந்த உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் ஷேன் வாட்சன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here