டாஸ் வென்ற இந்திய இந்திய பேட்டிங் செய்ய முடிவு ; இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் இதோ ;

0

இன்று மதியம் 2 மணியளவில் தொடங்க உள்ளது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

நேற்று முன்தினம் தான் இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று முடிந்துள்ளது. அதில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி வென்றுள்ளது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது . அதனால் இன்றைய போட்டி இந்திய அணி மிகவும் முக்கியமான போட்டியாகும்.

சமீபத்தில் நடைபெற்று நடந்து முடிந்துள்ளது டெஸ்ட் போட்டி. அதில் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது இந்திய. அதனால் ஒருநாள் போட்டியில் ஆவது இந்திய அணி வெல்ல வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இன்றைய இரண்டாவது போட்டி போலந்து பார்க் -கில் விளையாட உள்ளனர்.

இன்னும் இரு ஒருநாள் போட்டி மட்டுமே மீதமுள்ளது. அதில் இந்திய அணி இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். ஆனால் அது தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக சாத்தியமாகுமா? புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள கே.எல்.ராகுல் சரியாக அணியை வழிநடத்துவாரா ? முதல் போட்டியில் சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்யாத காரணத்தால் தான் இந்திய அணி தோல்வி பெற்றது.

இன்றைய போட்டியில் ஆவது இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இருக்குமா ?? இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று பார்த்தால் ஒரு மாற்றமும் இல்லாமல் களமிறங்க போகிறது இந்திய. இந்திய அணியின் விவரம் இதோ; கே.எல்.ராகுல், விராட்கோலி, ஷிகர் தவான், ரிஷாப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்டுல் தாகூர், புவனேஷ்வர் குமார், பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சஹால்.

வாழ்வா சாவா ? என்ற கட்டத்தில் தான் இந்திய அணி இன்றைய போட்டியில் விளையாட உள்ளது. கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறுமா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here