இவர் ஐபிஎல் போட்டி என்றால் மட்டும் விளையாடுவாங்க ; ஆனால் இந்திய என்றால் முடியாதா ? முன்னணி வீரரை பற்றி பேசிய கபில் தேவ் ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டெஸ்ட் போட்டிக்கான தொடரில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர்.

kapil Dev

நாளை இரவு 7 மணியளவில் பிரைன் லாரா மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளதால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி, மூன்றாவது போட்டியில் வெல்லும் அணிதான் தொடரையும் கைப்பற்றும் என்றதால் விறுவிறுப்பான போட்டியாக அமைய வாய்ப்புகள் இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இந்திய அணியில் பங்களிப்பதில்லையா ?

குறுகிய போட்டியான ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் இரு மாதங்கள் நடைபெறும். அது 20 ஓவர் போட்டி என்றதால் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, சிறப்பாக விளையாடினால் அதிக விலைக்கு ஏலத்தில் கைப்பற்ற அனைத்து அணிகளும் போட்டி போடும்.

கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. அப்படி இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடரை ரத்து செய்ய வேண்டுமென்று பல கருத்துக்கள் எழுந்து வந்தது. இருப்பினும் ஆண்டுதோறும் தவறாமல் ஐபிஎல் தொடர் நடைபெற்று கொண்டு தான் வருகிறது.

பிசிசிஐ-ல் விளையாடும் வீரர்களுக்கு கான்ட்ராக்ட் அடிப்படியில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்கு 7 கோடி என்ற கணக்கில் சம்பளத்தை கொடுத்து வருகிறது இந்திய (பிசிசிஐ). ஆனால் வெறும் இரு மாதங்கள் மட்டுமே விளையாடும் ஐபிஎல் தொடரில் 12, 16 கோடி என்ற கணக்கில் சம்பளத்தை வழங்கி வருகின்றனர்.

இதனால் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடினால் போதும் என்ற நிலையில் இருக்கின்றனர். இதனை பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரான கபில் தேவ் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

கபில் தேவ் பேட்டி :

“பும்ராவிற்கு என்னதான் ஆச்சு ? விளையாட ஆரம்பித்துவிட்டார் என்று நம்பிக்கை கொடுத்தனர். ஆனால் இப்பொழுது ? ஒருவேளை அவர் ஒருநாள் உலகக்கோப்பை 2023ல் விளையாட முடியாமல் போனால், நிச்சியமாக அனைத்து விதமான நேரமும் வீணாகிவிடும். அதேபோல தான் ரிஷாப் பண்ட் ஒரு சிறந்த வீரர்.”

“கடவுள் ஏன் இப்படி செய்கிறார் ? எனக்கு இதுவரை எந்தவிதமான காயமும் பட்டதில்லை. ஆனால் இன்று ஒரு வருடத்தில் 10 மாதங்கள் விளையாடு வருகின்றனர். அதில் அதிக பலன் இருந்தாலும் அவரவர் உடல்நிலையை கவனிக்க வேண்டும். ஐபிஎல் போட்டி மிகவும் சிறந்த போட்டி தான். இருப்பினும் அது உங்களை கெடுக்க கூடிய போட்டியும் தான்.”

“ஏனென்றால் சின்ன காயத்தை வைத்துக்கொண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவீங்க ..! அதே சின்ன காயத்தை வைத்து கொண்டு இந்திய அணிக்காக விளையாட முடியாத ? இதுபோன்ற இடைவேளை தேவையில்லாத விஷயம், நான் இதை உறுதியாக சொல்கிறேன்.”

சின்ன காயத்தை வைத்து கொண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடுவது மிகவும் முக்கியம் ஆ? கிரிக்கெட் வாரியம் இதனை கவனிக்க வேண்டும். ஒரு வீரர் எத்தனை போட்டிகளில் விளையாட வேண்டுமென்று முடிவு செய்ய வேண்டும். உங்களுடன் காசு, செல்வாக்கு போன்ற விஷயங்கள் இருக்கிறது. ஆனால் மூன்று – ஐந்து ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை இல்லையா ? நிச்சியமாக கிரிக்கெட் வாரியத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று கூறியுள்ளார் கபில் தேவ்.”