இந்திய அணியின் முக்கியான வீரருக்கு காயமா ?? அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா ? இல்லையா ?

உலக கிரிக்கெட் ரசிகர்களை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக ஆரம்பித்துள்ளது. அதிலும் சமீபத்தில் தான் சூப்பர் 12 நாடுகளுக்கு இடையேயான முக்கியமான போட்டி தொடங்கியுள்ளது.

அதனால் போட்டிகள் சற்று சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 151 ரன்களை குவித்தது.

பின்னர் 152 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 17.5 ஓவர் முடிவில் 152 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி.

இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டிய பேட்டிங் செய்து கொண்டு இருந்த நேரத்தில் அவரது தோள்பட்டையில் பலமாக அடிபட்டுவிட்டது. அதனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷான் பீல்டிங் செய்தார். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்த ஹார்டிக் பாண்டிய 8 பந்தில் 11 ரன்களை அடித்துள்ளார்.

வருகின்ற 31ஆம் தேதி நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய. அதில் ஹார்டிக் பாண்டிய விளையாடுவாரா இல்லையா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த மருத்துவ குழு ஹார்டிக் பாண்டியாவுக்கு ஒன்றும் இல்லை, அவர் ஃபிட் ஆக தான் இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஹார்டிக் பாண்டிய அணியில் இருக்க வேண்டாம் என்று பல கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவருக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பட்டது.

அதன்பின்னர், அவரால் சரியாய் பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி, ஹார்டிக் பாண்டிய ஒரு பவுலிங்- ஆல் ரவுண்டர். ஆனால் அறுவை சிகிச்சை-க்கு பிறகு பவுலிங் செய்வதை குறைத்துவிட்டார். சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக பவுலிங் செய்த அவர், பின்னர் ஐபிஎல் 2021 ஐக்கிய அரபு நாட்டில் நடந்த போட்டிகளில் பவுலிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஒருவேளை இனிவரும் போட்டிகளில் ஹார்டிக் பாண்டிய அணியில் இடம்பெற்றால் நிச்சியமாக பவுலிங் செய்வார் என்பது போல செய்திகள் வெளியாகியுள்ளது. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியாவுக்கு இடம் கொடுக்கலாமா ?? இல்லை வேண்டாமா ?? என்று உங்கள் கருத்தை COMMENTS பண்ணுங்க…!