இவர் அணியில் இல்லாதது பெரிய தலை வலியாக இருக்கிறது ; என்ன செய்வது என்று தெரியவில்லை ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

0

ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டி-20 போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதனால் இனிவரும் தொடர் போட்டிகள் சுவாரஷியத்திற்கு பஞ்சம் இருக்காது.

இன்று இரவு நடைபெற்று வரும் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றனர். இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

லீக் போட்டிகள் நடைபெறும் போது பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. அதனை பழிதீர்த்து கொள்ளுமா பாகிஸ்தான் அணி ? இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்து வருகிறது இந்திய.

அதில் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலின் அதிரடியான ஆட்டத்தால் ரன்களை குவித்துள்ளனர். இந்த ஆட்டத்தை பாகிஸ்தான் அணிக்கு மற்றுமின்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஏனென்றால் முதல் இரு போட்டிகளிலும் பெரிய அளவில் விளையாடாமல் இருந்த இருவரும் இப்பொழுது அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

ஆனால் எதிர்பாராத வகையில் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் இருவரும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். அவர்களை அடுத்து விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து விளையாடி வருகின்றனர். இதுவரை நடந்து முடிந்த 6 ஓவரில் 62 ரன்களை அடித்த நிலையில் 1 விக்கெட்டை இழந்துள்ளனர். அதில் கே.எல்.ராகுல் (28), ரோஹித் சர்மா (28), விராட்கோலி (1*)

போட்டி தொடங்கும் முன்பு பேசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா கூறுகையில் ; ” நாங்களும் பவுலிங் செய்ய தான் முடிவு செய்திருந்தோம். இருந்தாலும் பரவாயில்லை பேட்டிங் செய்யும்போது எந்த தயக்கமும் இல்லாமல் விளையாட போகிறோம். போட்டியில் நடக்க போகும் விஷயத்தை பற்றி தான் யோசிக்க வேண்டும், வெளிப்புற அழுத்தத்தை பற்றி கவலை பட தேவையில்லை.”

“யாருக்கு எப்பொழுதும் காயம் ஏற்படும் என்பது யாருக்கும் தெரியாது. அதில் ஜடேஜா காயம் காரணமாக ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து விலகினார். அதனால் நிச்சியமாக ப்ளேயிங் 11 ஐ தேர்வு செய்வதில் பெரிய தலை வலியாக தான் இருந்தது. இந்த போட்டியில் ஹர்டிக் பாண்டிய மீண்டும் இந்திய அணியில் விளையாட போகிறார்.”

“அதே நேரத்தில் தீபக் ஹூடா மற்றும் ரவி பிஷோனிக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.” ரோஹித் சர்மா சொன்னது போல ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அழுத்தமாக தான் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here