ஆஸ்திரேலியா பவுலர்களிடம் மல்லுக்கட்டிய இந்திய வீரர்கள் ; என்ன சொல்வது என்றே தெரியாமல் இருக்கும் ரோஹித் ;

0

இந்திய மாற்றம் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கி டார்கெட் செட் செய்ய அதிரடியாக விளையாடியது ஆஸ்திரேலியா.

தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் மற்றும் மிச்சேல் மார்ஷ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். இருப்பினும் இருவரும் விக்கெட்டை இழந்த பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு பார்ட்னெர்ஷிப் அமையாமல் போனது.

49 ஓவர் வரை விளையாடிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 269 ரன்களை அடித்துள்ளனர். அதில் டிராவிஸ் ஹெட் 33, மிச்சேல் மார்ஷ் 47, ஸ்டீவன் ஸ்மித் 0, டேவிட் வார்னர் 23, மரன்ஸ் 28, அலெக்ஸ் காரே 38, மார்கஸ் ஸ்டோனிஸ் 25, சீன் அபோட் 26ம் மிச்சேல் ஸ்டார்க் 10 ரன்களை அடித்துள்ளனர்.

இதனை அடுத்து 270 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது இந்திய.

இந்திய அணியின் பவுலிங் :

அட்டகாசமாக பவுலிங் செய்து முதல் மூன்று விக்கெட்டை கைப்பற்றினார் இந்திய அணியின் ஆல் – ரவுண்டரான ஹர்டிக் பாண்டிய. அதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

ஆனால் பின்பு அக்சர் பட்டேல், முகமத் ஷமி, குல்தீப் யாதவ் போன்ற பவுலர்கள் சரமாரியாக ரன்களை விட்டுக்கொடுத்தனர். அதனால் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி, முக்கியமான பேட்ஸ்மேன்களை ரன்கள் அடிக்கவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள் (இந்திய பவுலர்கள்).

ஆனால், ஆஸ்திரேலியா அணியின் பவுலர்கள் ஆடம் சம்ப, மிச்சேல் ஸ்டார்க், சீன் அபோட் , அஸ்டோன் அகர் போன்ற பவுலர்கள் அடித்த ரன்களை இந்திய கிரிக்கெட் அணியால் கட்டுப்படுத்தவே முடியாமல் போனது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோசமான நிலையில் இருந்தது இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங். அதேபோல இன்றைய போட்டியிலும் தொடர்ந்தாள் நிச்சியமாக இந்திய அணியால் தொடரை வெல்ல முடியாமல் போய்விடும்…!

ஒரு சில போட்டிகளில் அட்டகாசமாக பேட்டிங் செய்து வருகிறது இந்திய. ஒரு சில போட்டிகளில் பவுலிங் செய்து வருகின்றனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணியின் வீக்னஸ் இதுதான் என்று சொல்வதே கடினமாக இருக்கிறது..!

கிரிக்கெட் ரசிகர்களே..! நீங்க சொல்லுங்க இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீக்னஸ் என்ன ? உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்கபடுகிறது. அதனால் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here