ஆஸ்திரேலியா அணியின் முக்கியமான விக்கெட்டை கைப்பற்றிய இந்திய ஆல் – ரவுண்டர் ; குவியும் பாராட்டுகள் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருக்கின்றனர்.

முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய. இரண்டாவது போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளது ஆஸ்திரேலியா.

இதனை தொடர்ந்து இன்று மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதி விளையாடி வருகின்றனர்.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டம் சிறப்பாக அமைந்தது. ஆனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வருவதால் பார்ட்னெர்ஷிப் அமையாமல் தடுமாறுகின்றனர்.

இதுவரை 43 ஓவர் நடந்து முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டை இழந்த நிலையில் 209 ரன்களை அடித்துள்ளனர். அதில் டிராவிஸ் ஹெட் 33, மிச்சேல் மார்ஷ் 47, டேவிட் வார்னர் 23, மரன்ஸ் லபுஸ்சங்கமே 28, அலெக்ஸ் 38, மார்கஸ் ஸ்டோனிஸ் 25 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

கம்பேக் கொடுக்கும் ஆல் – ரவுண்டர் :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக பலர் இடம்பெற்றாலும் ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக தான் பார்க்கப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக விளையாடி அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் அட்டகாசமாக பவுலிங் செய்து வரும் ஹர்டிக் பாண்டிய, 6 ஓவர் பவுலிங் செய்து 33 ரன்களை விட்டுக்கொடுத்த நிலையில் மூன்று முக்கியமான விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதில் டிராவிஸ் ஹெட், மிச்சேல் மார்ஷ் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் போன்ற விக்கெட்டை கைப்பற்றியதால் இந்திய அணிக்கு அழுத்தம் குறைவாக இருக்கிறது.