பவுலிங்கில் பட்டைய கிளப்பிய இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் ; புள்ளிபட்டியலில் முதல் இடம் ; அரபு அணியை தொம்சம் செய்த இந்திய ;

0

ஆண்களுக்கான ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ள நிலையில், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் பெண்கள் கிரிக்கெட்க்கான ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா மற்றும் தாய்லாந்து போன்ற அணிகள் ஆசிய கோப்பை 2022யில் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். ஆனால் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்றி புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

இறுதியாக நடைபெற்று முடிந்துள்ள போட்டியில் ஸ்ரம்ரிதி மந்தன தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், சாய முகல் தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகமும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 178 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் அதிகபட்சமாக மோகன 10, தீப்தி சர்மா 64, ரொட்ரிகோஸ் 75 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 179 ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது ஐக்கிய அரபு அமீரகம். ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ஆமாம், ரன்களை அடிக்க முடியாமல் திணறிய ஐக்கிய பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்த நிலையில் 74 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 104 ரன்கள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை வென்றது இந்திய அணி. இதில் இந்திய அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது தான் உண்மை. ரேணுகா சிங் 4 ஓவர் பவுலிங் செய்து வெறும் 12 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். அதேபோல சினேகா ரானா 7 ரன்களையும், தயாளன் ஹேமலதா 8 ரன்களையும், தீப்தி சர்மா 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளனர்.

சமீபத்தில் தான் ஆண்களுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய அணி சூப்பர் 4 லீக் சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. ஆனால் பெண்கள் அணி இப்பொழுது சிறப்பாக விளையாடி வருவதால் இறுதி போட்டி வரை முன்னேறி செல்ல அதிகவாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.

நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி மோத உள்ளனர். இதுவரை மொத்தமாக 12 போட்டிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி மோதியுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி தான் அதிகபட்சமாக 10 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here