இன்று இரவு 8:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.
ஓவர் குறைப்பு மற்றும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் விவரம் :
போட்டி தொடங்க சற்று தாமதம் ஆனது. அதனால் 20 ஓவரில் இருந்து 8 ஓவருக்கு போட்டியை மாற்றினார்கள். அதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டம் மோசமாக ஆரம்பித்தது தான் உண்மை. கேப்டன் பின்ச்-ஐ தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டு வந்தனர்.
ஆனால், பின்ச் மற்றும் விக்கெட் கீப்பரான மாத்தியூ வெட் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 90 ரன்களை அடித்தனர். அதில் ஆரோன் பின்ச் 31, மாத்தியூ வெட் 43 ரன்களை அடித்தனர்.
இலக்கு மற்றும் இந்திய அணியின் பேட்டிங் :
பின்பு 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரனாகியது இந்திய. தொடக்க வீரரான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால் கே.எல்.ராகுல் விக்கெட்டை இழந்த பிறகு விராட்கோலி, சூரியகுமார் யாதவ் மற்றும் ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர்.
ஆனால் போட்டி தொடங்கிய முதல் பந்தில் இருந்து இறுதி ஓவர் வரை சிறப்பாகவும் அதிரடியாக விளையாடியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான ரோஹித் சர்மா. சமீப காலமாக பெரிய அளவில் பேட்டிங் செய்யாமல் இருந்த ரோஹித் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து சிறப்பாக விளையாட தொடங்கியுள்ளார்.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 20 பந்தில் 46 ரன்களை அடித்துள்ளார். அதனால் 7.2 ஓவர் முடிவில் 92 ரன்களை அடித்த இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. அதுமட்டுமின்றி, 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர். அதனால் நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டியில் யார் வெல்ல போகிறார்களோ அவர்கள் தான் தொடரையும் கைப்பற்ற போகின்றனர்.
இரண்டாவது டி-20 போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடுமா ? இல்லையா ?