இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி-20 லீக் போட்டிகள் இன்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு சற்று தாமதம் ஆனது. அதனால் 20 ஓவர் போட்டியை 8 ஓவராக குறைந்தனர்.
அதில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு தொடக்க ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு அமையவில்லை தொடர்ந்து விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா வீரர் 8 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 90 ரன்களை விளாசினார்கள்.
அதில் ஆரோன் பின்ச் 31, கிறீன் 5, மேக்ஸ்வெல் 0, டிம் டேவிட் 2, வெட் 43, ஸ்டீவ் ஸ்மித் 8 ரன்களை அடித்தனர். பின்பு 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது இந்திய. இந்த போட்டியில் புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறாதது அதிர்ச்சியான விஷயம் கிடையாது.
ஏனென்றால் முதல் டி-20 போட்டியில் பவுலிங் செய்து அதிக ரன்களை கொடுத்துள்ளார் புவனேஸ்வர் குமார். அதுமட்டுமின்றி ஆசிய கோப்பை போட்டியிலும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத புவனேஸ்வர் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டியில் மட்டும் இடம்பெற்று இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக மாறியுள்ளது.
போட்டி முன்பு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ; ” இந்த போட்டியை பார்க்க பல ரசிகர்கள் இங்கு வந்துள்ளனர். அதனை பார்க்க சந்தோசமாக உள்ளது. இன்றைய போட்டி நிச்சியமாக சவாலாக தான் இருக்கும். ஏனென்றால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியாது.”
“அதனால் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது தான் சரியான விஷயம். இன்றைய போட்டியில் உமேஷ் யாதவிற்கு பதிலாக பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.”
உமேஷ் யாதவ் நிச்சியமாக விளையாட வாய்ப்பு இருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் புவனேஸ்வர் குமாரை அணியில் இருந்து வெளியேற்றியது தான் மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விங் பவுலிங் சிறப்பாக செய்து வரும் புவனேஸ்வர் குமார் கடந்த சில போட்டிகளில் டெத் ஓவரில் சொதப்பி வருகிறார்.
குறிப்பாக ஆசிய கோப்பையில் தான். இதே நிலைமை உலகக்கோப்பை போட்டியிலும் தொடர்ந்தால் நிச்சியமாக இந்திய அணியின் வெற்றிக்கு எப்பொழுதும் கேள்விக்குறி தான் என்பதில் சந்தேகமில்லை. புவனேஸ்வர் குமார் (பவுலர்)-க்கு பதிலாக ரிஷாப் பண்ட் (பேட்ஸ்மேன்) இடம்பெற்றது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் ?
இதுவரை விளையாடிய இந்திய அணி 5 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 58 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 10, ரோஹித் சர்மா 368, விராட்கோலி 11, சூரியகுமார் யாதவ் 0, ஹர்டிக் பாண்டிய 3 ரன்களை அடித்துள்ளனர்.