Boss Returns ; ஆஸ்திரேலியா அணியை அலறவிட்ட, சாதனை செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன் ;

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி கடந்த மார்ச் 9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. மற்ற போட்டிகளை காட்டிலும் நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டனான ஸ்டீவன் ஸ்மித் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி பேட்டிங் அதிரடியாக விளையாடி 400க்கு மேற்பட்ட ரன்களை அடித்தனர்.

முதல் இன்னிங்ஸ்-ல் 167.2 ஓவர் வரை விளையாடிய ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அடித்துள்ளனர். அதில் டிராவிஸ் ஹெட் 32, உஸ்மான் கவாஜா 180, கேமரூன் கிறீன் 114 ரன்களை அதிரடியாக விளாசியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பொடியை எப்படியாவது ட்ரா செய்ய வேண்டுமென்று விளையாட தொடங்கிய இந்திய கிரிக்கெட் வீரர்கள். அதன்படி இளம் வீரரான சுப்மன் கில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.

ரவீந்திர ஜடேஜா, விராட்கோலி, புஜாரா, அக்சர் பட்டேல், ஸ்ரீகர் பரத் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணிக்கு பயத்தை ஏற்படுத்தியது இந்திய. 178.5 ஓவர் வரை விளையாடிய இந்திய 571 ரன்களை அடித்தனர்.

மூன்று வருடங்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்த இந்திய அணியின் சிங்கம் :

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி இதுவரை இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகளை செய்துள்ளனர். ஆனால் 2019ஆம் ஆண்டிற்கு பிறகு விராட்கோலியின் பங்களிப்பு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அதனால் கேப்டன் பதவியிலும் இருந்தும் விலகினார் விராட்கோலி. விராட்கோலி இறுதியாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கடந்த 2019ஆம் ஆண்டு சதம் அடித்தார்.

அதன்பின்னர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது போட்டிக்கான தொடரில் சிறப்பாக விளையாடி 364 பந்தில் 186 ரன்களை அடித்து தொம்சம் செய்துள்ளார். அதனால் போட்டியை ட்ரா செய்ய உதவியாக மாறியுள்ளது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகின்றனர். 6 ஓவர் முடிந்த நிலையில் 3 ரன்களை அடித்துள்ளனர். இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்த போட்டி ட்ராவில் முடியும்பட்சத்தில் நான்காவது முறையாக ஆஸ்திரேலியா அணியை வென்ற பெருமை இந்திய அணிக்கே…!