பா..! செம பவுலிங் ; பங்களாதேஷ் அணியை திணறடித்து இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் ; முழு விவரம் இதோ ;

பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிக்கான தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரில் 2 – 1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி தொடரை வென்றுள்ளனர்.

அதனை அடுத்து நேற்றுடன் முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டியின் விவரம் :

டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 404 ரன்களை அடித்தனர். பின்பு 405 ரன்களுக்கு மேல் அடித்தாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது பங்களாதேஷ் அணி. ஆனால் முதல் இன்னிங்ஸ் விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் எதுவும் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் வெறும் 150 ரன்களை மட்டுமே அடித்தது பங்களாதேஷ் அணி.

அதனால் இந்திய கிரிக்கெட் அணி 254 ரன்கள் முன்னிலையில் இருந்தனர். பின்பு இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. வழக்கம் போல் கே.எல்.ராகுல் 23 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், சுப்மன் கில் மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தலா ஒரு சதம் அடித்தனர். அதனால் 61.4 ஓவர் முடிவில் 258 ரன்களை அடித்த இந்திய கிரிக்கெட் அணி declare செய்தனர். அதனால் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய பங்களாதேஷ் அணியால் 324 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் இந்திய கிரிக்கெட் அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியுள்ளது.

சுழல் பந்து வீச்சாளர்களால் தோல்வியை சந்தித்த பங்களாதேஷ் அணி :

முதல் இன்னிங்ஸ் -ல் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் 5 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் வெறும் 40 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். பின்னர், இரண்டாவது இன்னிங்ஸ் பவுலிங் செய்த இந்திய அணியின் பவுலர்கள் குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய இருவரும் சிறப்பாக பவுலிங் செய்து தொடர்ந்து விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். அதில் அக்சர் பட்டேல் 4 விக்கெட்டைகளையும் , குல்தீப் யாதவ் 3 விக்கெட்டைகளையும் கைப்பற்றியதால் பங்களாதேஷ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.