மீண்டும் களமிறங்கிய 360 டிகிரி மன்னன் ; மும்பை அணியின் பலமே இவர் தான் ;

குஜராத் அணியை பந்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி. அதுமட்டுமின்றி, ராஜஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை கைப்பற்றிய மும்பை.

மும்பை மற்றும் குஜராத் போட்டியின் விவரம் :

நேற்று இரவு 7:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் பெரிய அளவில் ஏற்படவில்லை. அனால் மிடில் ஒவரில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் எந்த போட்டியிலும் இல்லாத அளவிற்கு அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 218 ரன்களை குவித்தனர். அதில் இஷான் கிஷான் 31, ரோஹித் சர்மா 29, சூரியகுமார் யாதவ் 103*, நேஹால் வதேரா 15, விஷ்ணு வினோத் 30, டிம் டேவிட் 5 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டம் மோசமான நிலையில் அமைந்தது. சக, சுப்மன் கில், ஹர்டிக் பாண்டிய விஜய் ஷங்கர், மில்லர் போன்ற வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டை பறிகொடுத்தனர். இருப்பினும் குஜராத் அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரஷீத் கான் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

32 பந்தில் 79* ரன்களை விளாசினார். இருப்பினும் சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் வெறும் 27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. இறுதி ஓவர் வரை போராடிய குஜராத் அணி 191 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதில் விஜய் ஷங்கர் 29, டேவிட் மில்லர் 41, ராகுல் திவேதிய 14, ரஷீத் கான் 79* ரன்களை அடித்துள்ளனர். மீண்டும் ஆட்டத்திற்கு திரும்பிய ஆட்ட நாயகன். ஆமாம், முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பெரிய அளவில் பேட்டிங் செய்யாமல் மோசமான தோல்வியை பெற்று வந்துள்ளனர்.

அப்பொழுது சூரியகுமார் யாதவின் பங்களிப்பும் பெரிய அளவில் இல்லை. ஆனால் ஐபிஎல் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய வருகின்றனர். குறிப்பாக சூரியகுமார் யாதவின் பங்களிப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.

அதனால் முதல் இரு இடங்களை கைப்பற்ற மும்பை, சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.